வாழ்த்து

இறை வாழ்த்து

பாட அறிமுகம்
Introduction to Lesson


தொடங்கும் செயல் இனிதே நிறைவேற இறைவனை வாழ்த்தித் தொடங்குதல் மரபு. ‘வாழ்த்து’ என்ற சொல்லுக்குப் ‘போற்றுதல்’ என்பது பொருள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கருத்தை உலகிற்குத் தந்தவர்கள் தமிழர்கள். இறைவனை வாழ்த்தியே எல்லாத் தமிழ் நூல்களும் தொடங்கும்.

இறைவன் சாதி, சமயம் இல்லாதவன். அவன் இயற்கையின் வடிவம்; இதனையே வேதநாயகம் பிள்ளையின் இப்பாடலும் விளக்குகிறது.