மொழி வாழ்த்து
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. மொழிவாழ்த்துப் பாடலை இயற்றியவர் யார்?
மொழிவாழ்த்துப் பாடலை இயற்றியவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.
2. மொழிவாழ்த்துப் பாடல் இடம் பெற்ற நூல் எது?
மொழிவாழ்த்துப் பாடல் இடம் பெற்ற நூல் ‘நாமக்கல் கவிஞர் பாடல்கள்’ என்னும் நூலாகும்.
3. கவிஞர் வெ. இராமலிங்கனார் பிறந்த ஊரும், வாழ்ந்த ஊரும் எவை?
பிறந்த ஊர் சேலம் அருகில் உள்ள மோகனூர். வாழ்ந்த ஊர் நாமக்கல் ஆகும்.
4. நாமக்கல் கவிஞர் காலத்தைப் பற்றிக் கூறுக.
இவரது காலம் 19.10.1888 முதல் 24.08.1972 வரையாகும்.
5. வெ. இராமலிங்கனார் இயற்றிய வேறு நூல்கள் யாவை?
இவர் இயற்றிய வேறு நூல்கள் தமிழன் இதயம், சங்கொலி, காந்திஅஞ்சலி, அவனும்அவளும், என்கதை, மலைக்கள்ளன் முதலியவையாகும்.
6. தமிழ் மொழியின் சிறப்பில் ஒன்றினைக் கூறுக.
தமிழ் மொழியானது ஆழம் மிக்க கலை என்னும் கடலைக் கடப்பதற்குத் தெப்பமாக இருப்பது.
7. தடுமாறும் மனத்திற்கு அமைதி தருவது எது?
தடுமாறும் மனத்திற்கு அமைதி தருவது தமிழ்மொழியாகும்.
8. தமிழின் சிறப்பினை ஓர் உவமையின் மூலம் விளக்குக.
உயர்ந்த மலையின் உச்சியில் ஏற்றப்பெற்ற ஒளிவிளக்கு போன்று எல்லாருக்கும் அறிவொளியைத் தருவது தமிழாகும்.
9. அறங்களில் தலையாய அறங்களாக இரண்டினைக் கூறுக.
கொல்லாமை, பொய்யாமை என்னும் இரண்டும் தலையாய அறங்களாகும்.
10. தமிழை எவ்வாறு நல்லவர்கள் வணங்கித் தொண்டு செய்தனர்?
தமிழை சொல், செயல், மனம் ஆகிய மூன்றாலும் நல்லவர்கள் வணங்கித் தொண்டு செய்தனர்.