உலக வாழ்த்து
பாடல் கருத்து
Theme of the Poem
நிலவைப் போற்றுவோம்! மலர் மாலையைச் சூடிய சோழ மன்னனின் வெண்கொற்றக் குடையைப் போலக் குளிர்ந்த ஒளியைத் தந்து இந்த உலகைக் காப்பதால் நிலவைப் போற்றுவோம்!
கதிரவனைப் போற்றுவோம்! காவிரி நாட்டு மன்னனின் ஆணைச் சக்கரம் போலக் கதிரவனும் இமய மலையை வலம் வருவதால் கதிரவனைப் போற்றுவோம் !
மழையைப் போற்றுவோம்! கடல் நீரை வேலியாகக் கொண்ட இவ்வுலகைச் சோழ மன்னனின் கருணை நெஞ்சம் காப்பதைப் போல வானத்தில் இருந்து நீரைப் பொழிந்து இந்த உலகத்தைக் காத்து வருவதால் மழையைப் போற்றுவோம்!