மொழி வாழ்த்து
பாடல்
Poem
மொழி வாழ்த்து
கலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம்
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்
அலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்
மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம்
கொல்லாமை பொய்யாமை எனுமிவ்வி ரண்டில்
எல்லாநல் லறமுற்றும் இடைநிற்றல் கண்டு
சொல்லாலும் செயலாலும் மனதாலும் தொழுதோர்
நல்லோர்கள் பணிதந்த தமிழ்வாழ்க நாளும்
- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்