1. வாழ்த்து

மொழி வாழ்த்து

ஆசிரியர்அறிமுகம்
Introduction to author


நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

இவரது இயற்பெயர் வெ. இராமலிங்கம். பெற்றோர் வெங்கடராமன் - அம்மணி அம்மையார். பிறந்த ஊர் சேலம் அருகில் உள்ள மோகனூர். இவரது காலம் 19.10.1888 முதல் 24.08.1972 வரை.

தமிழன் இதயம், சங்கொலி, காந்தி அஞ்சலி, அவனும் அவளும், என்கதை, மலைக்கள்ளன், தமிழ்த்தேன் முதலியவை இவர் எழுதிய நூல்களாகும். இவர் நாமக்கல்லில் வாழ்ந்தமையால் இவர் ‘நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்பெற்றார். இவர் காந்தியடிகளின் வழிகாட்டலில் விடுதலைப் பேராட்டத்தில் பங்கு கொண்டமையால் ‘காந்தியக் கவிஞர்’ எனவும் போற்றப்பெற்றார்.