1. வாழ்த்து

மொழி வாழ்த்து

பாட அறிமுகம்
Introduction to Lesson


மக்கள் வாழ்வில் சிறப்பிடம் பெறுவது தாய் மொழி. மொழி மற்றவர்கேளாடு வாழ உதவி செய்கிறது. தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி தமிழ். அம்மொழி வளர்ந்தால்தான் தமிழ் மக்கள் வளர முடியும். இக்கருத்திற்கு ஏற்பத் தமிழ்மொழி வளர வாழ்த்தும் ஒரு பாடல் நமக்குப் பாடமாக வந்துள்ளது.

நாமக்கல் கவிஞரின் ‘நாமக்கல் கவிஞர் பாடல்கள்’ என்னும் நூலில் பல தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. அவற்றுள் ஒரு தலைப்பு ‘தமிழ்த்தேன் மலர்’ என்பதாகும். அத்தலைப்பில் உள்ள இரு பாடல்கள் உங்கள் பாடத்தில் இடம் பெற்றுள்ளன.