1. வாழ்த்து

இறை வாழ்த்து

பாடல் கருத்து
Theme of the Poem


காலையில் சூரியன் ஒளி பொருந்திய தன் கதிர்களாகிய கைகளால் இறைவனைத் தொழுகிறான். பறவைகள் இசையொலியுடன் ஆடியும், பாடியும் இறைவனைத் தொழுது போற்றுகின்றன. மரம், செடி, கொடிகள் எல்லாம் தம் மணம் பொருந்திய மலர்களைத் தூவி வணங்குகின்றன. விண், மண், நீர், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பூதங்களும் தத்தம் தொழில்களைச் செய்து இறைவனைத் துதிக்கின்றன. முழங்குகின்ற கடலானது தனது பேரொலியால் இறைவனைப் போற்றுகின்றது. அவ்வாறிருக்க, மனமே நீ இறைவனைப் போற்றி வணங்காதிருப்பது ஏனோ? வணங்குவாயாக!.