1. வாழ்த்து

உலக வாழ்த்து

ஆசிரியர்அறிமுகம்
Introduction to author


இளங்கோவடிகள்

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள். இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்; தாய் நற்சோணை. சேரன் செங்குட்டுவன் இவருக்கு அண்ணன். ‘இளையவரான இளங்கோவே நாடாள்வார்’ என்று கணியன் கூறிய கணிப்பைப் பொய்யாக்கி இளமையிலேயே இளங்கோ துறவு பூண்டார். இவர் அரசியல் வேறுபாடும், சமய வேறுபாடும் கருதாத உண்மைத் துறவி ஆவார். இவர் 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று அறிஞர் கூறுவர்.