அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

மஞ்சு ... வெண் மேகம் 102, 130, 170
மஞ்ஞை ... மயில் 134
மடங்கல் ... இயமன் 226
மதர்த்தல் ... செருக்குதல் 172
மதுகரம் ... வண்டு 181
மதுத்தண்டு ... கரும்பு 73
மத்து ... ஊமத்தம் பூ 180
மந்தமாருதம் ... தென்றல் 56
மந்தாநிலம் ... தென்றல் 65, 202
மரு ... வாசனை 180
மருமம் ... மார்பு 65, 154, 234
மருளுதல் ... போலுதல் 134
மல்லர் ... மற்போர்வீரர் 161
மல்லல் ... வளப்பம் 65, 154, 234
மவுலி ... முடி 179
மழகளிறு ... விநாயகன் 172
மழவர் ... வீரர் 257
மறலி ... கூற்றுவன் 119, 175
மறி ... ஆடு 217
மறி ... ஆட்டுக்குட்டி 278
மறுகுதல் ... மனம் வருந்தல் 25
மன்ற ... தெளிவு 258
மா ... திருமகள் 274
மா ... சூரபன்மாவாகிய மாமரம் 168
மாகம் ... ஆகாயம் 148
மாணாதார் ... பகைவர் 161
மாதங்கி ... மதங்கி - பாண்மகள் 147
மாமடிகள் ... சிவனுக்கு மாமனாராம் தக்கன் 181
மாரன் ... காமன் 173
மீளி ... தலைவன் 198
முகிலூர்தி ... இந்திரன் 197
முசு ... கருங்குரங்கு 87
முடங்குதல் ... வளைதல் 74
முதுக்குறைவு ... சிறுவயதிலேயே பேரறிவுடைமை 233
முயக்கு ... தழுவுதல் 150
முருகு ... மணம் 154, 172
முருங்குதல் ... அழிதல் 256
முறி ... தளிர் 164, 287
முறுவல் ... பல் 212
மூசுதல் ... மொய்த்தல் 275
மேயீர் ... மேவினீர் 130
மேவார் ... பகைவர் 126
மை ... கார் மேகம் 229, 249
மொய்ம்பு ... வலிமை 110
மோடு ... வயிறு 87
மௌவல் ... மல்லிகை 242