37. விழாக் கொண்டது

    இதன்கண் : பிரச்சோதனன் தன் மக்கள் உதயணன் பால் கல்வி பயின்று வல்லுநராயிருத்தலை அறிந்து, அவன் நன்
னாளிலே அரங்கேற்றுவித்தலும், வாசவதத்தை பாழாக கேறுதலும், இம்மாணவரை அவையோர் பாராட்டுதலும்  பிரச்சோதனனும்
கோப்பெருந்தேவியும் பிறரும் மகிழ்தலும்மன்னவன் உதயணனைப் பாராட்டி அவனை அவன் நகர்க்குப் போக்க நினைதலும்,
யூகியின் சூழ்ச்சியாலே பாகீரதி என்பவள் தெய்வமேறியவள் போன்று நடித்துக் கூறிய கூற்றால் நகரமாந்தர் அஞ்சுதலும், மன்
னன் தெய்வக்குறை தீர்தற்கு நீர் விழாச் செய்யத் தொடங்குதலும் பிறவும் கூறப்படும்
 
 

 கோவலர் கைதொழக் கோயில் போகி
 வேல்கெழு முற்றமொடு வீதியின் நீங்கிக்
 குஞ்சரச் சேரித் தன்னகர் எய்தி
 அன்றை வைகல் சென்ற பின்னர்

 
5




10




15

 முரசுகடிப்பு இகுத்த மூரி முற்றத்து
 அரசிறை கொண்ட அகன்கண் வாரியுள்
 கையார் கடகத்துக் கதிர்வாள் கச்சையர்
 ஐஆ யிரவர் அரச குமரரொடு
 பொன்தலை யாத்த பொதியில் பிரம்பின்
 வண்ணச் செங்கோல் வலவயின் பிடித்த
 எண்ணூற்று அறுவர் இளங்கிடை காப்பரொடு
 புறஞ்சுற் றமைந்த பிறங்குகடைப் படுகால்
 நித்திலந் தொடரிய நிகரில்கம் மத்துச்
 சித்திரம் பயின்ற செம்பொன் விதானத்துச்
 சந்தனப் பீடிகைச் சார்வணை யேறிப்
 பன்மயிர்க் கவரியோடு பரிசனஞ் சுற்றப்
 பெருமகன் இருந்த திருமலி அவையத்துக்

 


20




25

 கொற்ற வேந்தன் குடிகெழு குமரரைக்
 கற்றவை காட்டும் வத்தவர் கோஎனப்
 பல்பெருங் கேள்வி படைத்தோர் அன்ன
 கல்வி மாந்தர் கலித்த கௌவையில்
 ஆப்புறு பாடமொடு அருத்தங் கூறி
 நாக்கொள் கேள்வி நவிற்றிக் காட்டி
 மண்டல மருங்கில் கொண்டகம் புகுந்து
 படைகெழு தெய்வம் புகலப் பலிவகுத்து

 




30




35




40

 இடைநாட் பிறையின் ஏற்றிய திருவிற்
 கண்ணால் உறுத்துக் கடவதிற் றாங்கி
 எண்ணால் அரணமும் ஈரெண் கரணமும்
 துன்னரும் பாசமொடு தொடங்குபு தோன்றி
 அரிதியல் சாரியை அந்தரத்து இயக்கமும்
 பொருவின் நாழிகை பூணு மாறும்
 செருவாள் ஆட்டுஞ் சேடகப் பிண்டியும்
 சாரியை விலக்கும் வேல்திரி வகையும்
 இடுக்கண் போதின் ஏனேமப் பூமியுள்
 வகுத்த வாயில் வகைவகை இவையென
 ஒட்டும் பாய்த்துளுங் கரந்தொருங்கு இருக்கையும்
 செருக்கொள் யானை மருப்பிடைத் திரிவும்
 தாழாச் சிறப்பிற் பாழியிற் பயின்ற
 காலாள் கரும விகற்பமுங் காட்டிக்
 கருவித் தாக்கினுங் காலாள் சுற்றினும்
 தனியின் ஆயினுந் தானையொடு ஆயினும்
 புகவும் போக்கும் பொச்சாப்பு இன்றிப்
 பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி

 

45




50




55

 வண்பரிப் புரவியும் வான்நெடுந் தேரும்
 அண்ணல் யானையும் பண்ணுறுத்து ஏறி
 இலைய இனப்பரி கொளீஇச் சிலையின்
 மதியோர் புகழ்ந்த மரபியல் வழாமை
 நுதியமை நுண்படை நூல்வழிச் சிதறி
 மழைத்துளி படினும் வான்துகள் சூழினும்
 விலக்கித் தவிர்க்கும் விற்றொழி லுள்ளிட்டு
 இலக்கத் திண்படை யேறுபல காட்டலும்
 தலைத்தோர் யானைக்கும் தருக்கினர் ஆயினர்
 படைத்தே ராள பாலகர் இவரென
 அவைபுகழ்ந்து எடுத்த வரும்பெறல் கிளவியொடு
 தகைமுடி வேந்தன் தாள்புகழ்ந்து ஏத்தித்

 




60

 தகைசால் சிறப்பின் தன்னொடு நம்மிடைப்
 பகைமுத லாகப் பழிதர வந்த
 செற்ற நம்வயின் கொள்ளான் சிறந்த
 சுற்ற மாகச் சூழ்ச்சியின் விளக்கி
 நன்றுணர் விச்சை நம்பியர்க்கு அருளி
 அன்புவழிப் படுத்த அரச குமரற்குக்
 கைம்மாறு இதுவெனக் கடவதி னிறையும்
 செம்மாண் ஆற்றாச் சிறுமையம் ஆதலின்

 

65




70

 ஒன்பதின் கோடி ஒண்பொருள் கொடுப்பினும்
 பண்பெனக் கொண்டிவன் பண்டஞ் செய்யான்
 நங்குடித் தலைமை இங்கிவற்கு இயற்றி
 நாமிவன் குடைக்கீழ்க் காமுறக் கலந்துஇவன்
 வேண்டியது செய்யு மாண்பல திலமென
 மண்முதல் இழந்தோற்கு மறுமனம் அழித்துத்
 தன்பதிப் புகுந்து தான்மணம் படுகெனக்
 குறையுறு கிளவி முறைபல பயிற்றிச்
 செயப்படு கருமம் செய்ந்நரோடு உசாஅய்
 முயற்சி உள்ளமொடு முந்தவன் போக்கி

 

75




80

 அவைக்களம் எழுந்து குவைக்களம் புக்குக்
 குலமகள் பயந்த குடிகெழு குமரர்
 நிலமகள் நயக்கும் நீதிய ராகி
 வெறுமை நீங்கினர் விச்சையின் அமைந்தெனத்
 திருநுதல் ஆயத்துத் தேவியர் நடுவண்
 பெற்ற நாளினும் பெரும்பூண் புதல்வரைக்
 கற்ற நாள்வயின் கலிசிறந்து உரைஇ
 மகிழ்ச்சிக் கிளவி மழையென இசைப்ப

 



85

 முகிழ்த்தகை முறுவல் முனிவின்று பயிற்றிக்
 கடவர் வகுத்த கரும நாளால்
 கடவதை ஆதலின் மடவரல் ஆயத்து
 நங்கை கேள்வியு நல்லவைப் படுக்கென
 வந்துரைத் தனரால் வத்தவன் தமரென

 



90




95




100

 வெந்திறல் வேந்தனும் நன்றென அருளி
 வாயில் கூத்துஞ் சேரிப் பாடலும்
 கோயில் நாடகக் குழுக்களும் வருகென
 யாழுங் குழலும் அரிச்சிறு பறையும்
 தாழ முழவுந் தண்ணுமைக் கருவியும்
 இசைச்சுவை தரீஇ எழுபவும் எறிபவும்
 விசைத்தெறி பாண்டிலொடு வேண்டுவ பிறவும்
 கருவி அமைந்த புரிவளை ஆயமொடு
 பல்லவை இருந்த நல்லா சிரியர்
 அந்தர உலகத்து அமரர் கோமான்
 இந்திரன் மாநகர் இறைகொண் டாங்குப்
 பொருவேல் முற்றத்துப் புரிவனர் புகுதரப்
 பாடல் மகளிர் பல்கல ஒலிப்ப
 ஆடல் மகளிர் ஆயமொடு கெழீஇ
 வேல்வேந்து இருந்த நூல்வேண்டு அவையத்துத்

 



105




110

 துகிர்த்துலா மண்டபத்து அகிற்புகை கமழக்
 கண்டங் குத்திய மண்டப எழினியுள்
 தாயுறை வியனகர்த் தமர்பா ராட்ட
 ஆயஞ் சுற்ற வணியிழை புகுதந்து
 ஒலிபெறு கீதத்து ஓதை போகிய
 பலிகெழு நல்யாழ் பாங்குறத் தழீஇக்
 கின்னர கீதத்துக் கேள்வி மாந்தர்
 முன்னுற நின்று மூதறி செவிலிநும்
 மகள்மா ணாக்கி வணங்கும் நும்மென
 அவைப்பரி சாரங் கடத்துளிப் போக்கி

 



115

 ஐவகைக் கதியும் அற்ற மின்றித்
 தெய்வ நல்யாழ் திருந்திழை தைவர
 மெய்பனிப் பதுபோன் மொய்யவை மருள
 நாற்பெரும் பண்ணும் எழுவகைப் பாலையும்
 மூவேழ் திறத்தொடு முற்றக் காட்டி
 நலமிகு சிறப்பொடு நல்லவை புகழ
 இயம்வெளிப் படுத்தபின் இசைவெளிப் படீஇய

 

120




125




130

 எரிமலர்ச் செவ்வாய் எயிறுவெளிப் படாமைத்
 திருமலர்த் தாமரைத் தேன்முரன் றதுபோல்
 பிறந்துழி அறியாப் பெற்றித் தாகிச்
 சிறந்தியம்பு இன்குரல் தெளிந்தவண் எழுவச்
 சுருக்கியும் பெருக்கியும் வலித்தும் நெகிழ்த்தும்
 குறுக்கியும் நீட்டியும் நிறுப்புழி நிறுத்தும்
 மாத்திரை கடவா மரபிற்று ஆகிக்
 கொண்ட தானம் கண்டத்துப் பகாமைப்
 பனிவிசும்பு இயங்குநர் பாடோர்த்து நிற்பக்
 கனிகொள் இன்னிசைக் கடவுள் வாழ்த்தித்
 தேவ கீதமொடு தேசிகம் தொடர்ந்த
 வேத இன்னிசை விளங்கிழை பாடத்

 




135




140

 திருந்திழை மாதர்கொல் தெய்வங் கொல்லென
 இருந்தவர் தெருளார் இசைபுகழ்ந் தேத்தி
 நூலுஞ் செவியும் நுண்ணிதின் நுனித்தே
 யாழும் பாடலும் அற்ற மின்றி
 விலக்கும் விடையும் விதியின் அறிந்து
 துளக்கில் கேள்வித் தூய்மையினும் முற்றி
 வத்தவ நாடன் வாய்மையின் தருக்கும்
 கொற்ற வீணையுங் கொடுங்குழை கொண்டனள
 இறைகெழு குமரரும் ஏனை விச்சைத்
 துறைநெறி போகிய துணிவினர் ஆயினர்

 




145

 தேயாத் திருவ நீயுந் தேரின்
 நிலங்கொடை முனியாய் கலங்கொடை கடவாய்
 வேள்வியில் திரியாய் கேள்வியில் பிரியாய்
 இனையோய் தாள்நிழல் தங்கிய நாடே
 வயிர வெல்படை வானவர் இறைவன்
 ஆயிரங் குஞ்சரத்து அண்ணல் காக்கும்
 மீமிசை உலகினுந் தீதிகந்து அன்றெனத்
 தொல்லிசை யாளர் சொல்லெடுத்து ஏத்தப்

 

150




155

 புகழார் வெய்திய திகழ்முடிச் சென்னியன்
 ஆசில் பாடல் அமிழ்துறழ் நல்யாழ்க்
 கேள்வி நுனித்த கீத வித்தகத்து
 ஆசா ரியரொடு அரங்கியன் மகளிரை
 ஏடுகோ ளாளர் எனையரென்று எண்ணிப்
 பேரெழுத்து ஓலை பெறுமுறை நோக்கிக்
 கட்டுடைக் கலனும் கதிர்முகத்து ஆரமும்
 பட்டியல் கலிங்கமொடு பாசிழை நல்கி
 இலைத்தொழில் தடக்கையள் எழுந்தீகி இனியெனக்

 


160

 கலைத்தொழில் அவையம் கைதொழப் புக்காங்கு
 இருந்த இறைவன் திருந்தடி குறிகிச்
 செம்பொன் நல்யாழ் சிலதிகைந் நீக்கி
 அணங்குறை மெல்விரல் வணங்கினள் கூப்பி

 



165

 இறைஞ்சிய மாதரை எடுத்தனன் நீழீஇப்
 பிதிர்சுணங்கு ஆகமொடு பெருந்தோள் நீவிக்
 கதிர்பொன் பட்டமொடு கனங்குழை திருத்தி
 ஒண்நுதல் மாதரை ஒருகை பற்றிப்
 பொன்இழை தாயுழைப் போகெனப் புகலலும

 



170

 தான்முன் கண்ட தவற்றினள் ஆதலின்
 சென்ற வாயிற்கு ஒன்றலள் ஊடிப்
 புலவியில் கருகிய திருமுகம் இறைகமள்கு
 உவகையின் மகிழ்ந்த முறுவலள் ஆகிக்
 கடைக்கண் தூதால் காவலன் கடைஇச்
 சுடர்க்குழை பயந்தோள் சொல்லா நிற்ப

 


175




180

 இன்சொன் மகளிர் எனைப்பலர் உள்ளும்
 நுந்தை நெஞ்சம் நீயறப் பெற்றாங்கு
 உரக்களிறு அடக்கிய ஓசைத் தாகி
 வரத்தொடு வந்த வசைதீர் சிறப்பின்
 வத்தவ குலத்துத் துப்பெனத் தோன்றிய
 தகையொலி வீணையொடு அவைதுறை போகி
 உருவிற்கு ஒத்த திருவினை யாகிக்
 குடிவிளக் குறூஉங் கொடியே வாவென
 மாதர் ஆயத்து மகள்வயின் கொளீஇத்
 தாயர் ஆல்லாம் தழீஇயினர் முயங்கிச்
 சுற்ற மாந்தர் தொக்கனர் புகல

 

185




190

 வத்தவர் இறைவனை வருகெனக் கூஉய்ப்
 பொற்கோட்டு அம்பலம் பொலிய ஏறிக்
 கற்றறி வாளர் சுற்றிய நடுவண்
 தாமுயல் வேட்கையின் மாநிலத்து உறையுநர்
 மரமுதல் சாய மருந்துகொண் டாஅங்கு
 நங்குடி வலித்தல் வேண்டி நம்பி
 தன்குடி கெடுத்த தகவி லாளனேன்
 என்மனம் புகல வேண்டின் இவனைத்தன்
 மண்மிசை நிறுக்கும் மந்திரம் இருக்கென
 மதிவ லாளர் விதிவகை இதுவெனத்

 

195

 தண்ணும் சேனையும் தகைக்,கோ சம்பியும்
 பண்டுகண் அழிந்த பகையினை நீக்கிப்
 பொன்னும் நெல்லும் புரிவின் வழங்குகென்று
 நொன்றெனப் பயிற்றி உருமிடித் தன்ன
 வென்றி முரசம் வீதிதோ றெருக்கி

 

200




205

 முன்யான் இவனை முருக்கலும் வேண்டினென்
 பின்யான் இவனைப் பெருக்கலும் உற்றனென்
 எமர னாயின் இறைகொடுத் தகல்க
 அமர னாயின் அமைவொடு நிற்கென
 அடல்வேல் தானை யாருணி யரசற்கு
 ஞாலத்து இன்னுயிர் வாழ்வோர் நாப்பண்
 காலம் பார்க்குங் காலன் போல
 வெல்போர் உதயணன் வெஃறுணை யாகப்
 பல்கோடு யானைப் பாலகன் வருமெனக்
 கணக்குத்துறை முற்றிய கடுஞ்சொல் ஓலை
 அரக்குப்பொறி ஒற்றி ஆணையிற் போக்கி

 
210




215




220

 எண்படைத் தலைவரும் இருபிறப் பாளரும்
 எண்பதின் ஆயிரம் இளம்பது வாய்களும்
 ஏற்றினம் வரூஉம் நாற்றங் கழுமிய
 மதங்கவுள் பிறந்த கதந்திகழ் படாத்த
 ஐந்நூறு யானையும் ஆயிரம் புரவியும்
 எண்பது தேரும் இருவகைத் தொறுவும்
 நன்மணி ஐம்பால் நருமதை உள்ளுறுத்து
 இரங்குபொன் கிண்கிணி அரங்கிய ஆயத்து
 நாடக மகளிர் நாலெண் பதின்மரும்
 கோடியல் ஊர்தியுங் கொண்டுவிசி உறுத்துக்
 கோடி விழுநிதி கொண்டகஞ் செறிக்கப்
 பாடியல் பண்டியொடு படைசெலல் விதித்து

 



225

 வளங்கெழு தாயத்து வழியடை ஆகிய
 இளங்கோ நம்பியும் இவனொடு செல்கென
 மாண்மொழிக் குருசில் ஆணைவைத்து அகம்புக
 நாள்கொண்டு எழுவது நாளை யாமென
 அமைச்சனும் செவிலியும் அமைந்த வகையால்
 நாள்கொளற்கு இருந்துழி நன்னகர் கேட்பக்

 


230

 கழிந்த யாண்டும் கயநீந் ஆட்டணி
 ஒழிந்ததன்று அண்டம் உயர்கொடி மூதூர்க்
 குருதி வெள்ளம் கூலம் பரப்பி
 அழுகுரல் மயங்கிய அல்லற் றாக
 மதவலி வேழம் மையல் உறுத்த
 கடவுள் யானெனக் கடவுள் காட்டிப்
 பேரிசைக் கடவுள் பெருநகர்த் தோன்றிச்

 
235

 சேரி ஆயத்துச் செம்முதிர் பெண்டிரொடு
 கட்டறி மகடூஉக் கடிமுறத் திட்ட
 வட்ட நெல்லும் மாண்பில பெரிதெனக்
 குற்றம் உண்டெனில் கூறுமின் எமக்கெனக்

 

240




245

 கருங்காற் கலிங்கமொடு காஅழ் கலக்கிப்
 பிட்ட வாயள் பெரும்பா கீரதி
 பொய்ப்பே ஏறிப் பொள்ளென நக்கு
 முலைஇடைத் துளங்கும் முத்துறழ் ஆரமொடு
 தகையெருத் துரிஞ்சுந் தமனியக் குழையள்
 கொடும்பூண் மார்பில் கூந்தல் பரப்பிப்
 பிடிக்கை அன்ன பெருந்தோள் ஓச்சி
 இடிக்குரல் முரசின்முன் எழுந்தனள் ஆடி

 



250

 விழாக்கோ ளாளரைக் குழாத்திடைத் தரீஇத்
 திருநீர் ஆட்டணி மருவீர் ஆயின்
 பிணக்குறை படுத்துப் பிளிறுபு சீறிய
 இன்றும் சென்றியான் குஞ்சரம் புகுவலென்று
 அஞ்சில் ஓதி அணங்குவாய் கூறப்

 



255

 பன்றியெறி யுற்ற புண்கூர் ஞமலி
 குன்றா அடிசில் குழிசி காணினும்
 வெரீஇ அன்ன வியப்பினர் ஆகி
 அலகை மூதூர் ஆன்றவர் எல்லாம்
 உலகம் திரியா ஒழுக்கினர் ஆதலின்
 காவல் மன்னற்குக் கதுமென உரைத்தலின்

 


260

 தேவர் சொல்லும் தேததை ஆகென
 வெண்முகை அடுத்துப் பைந்தோடு படுத்து
 மாதர் அங்கையின் மங்கலத்து இயற்றிய
 வாகைக் கண்ணி வலத்தில் சூட்டித்
 தானைச் சேரித் தலைப்பெருந் திருவன்
 நாணீர் ஆட்டணி நாளையென்று அறைதலும்

 

265




270

 விளையாட்டு ஈரணி விற்றுங் கொள்ளும்
 தொலைவின் மூதூர்த் தொன்றின மறந்துராய்த்
 தோணியும் மரமும் துறைநா வாயும்
 நீரியல் மாடமும் நீந்தியல் புணையும்
 சுண்ணமுஞ் சூட்டுஞ் சுவைநறுந் தேறலும்
 செண்ணச் சிவிகையும் தேரும் வையமும்
 கண்ணாற் பிடிகையுங் கட்டமை ஊர்தியும்
 பண்ணிரும் பிடியும் பண்ணுவனர் மறலிச்
 செவ்வி பெறாஅ வைகலர் ஆகி

 


275

 வான்கிளர்ந் தன்ன வளநீர் ஆட்டணி
 சேணிடை உறைநரும் சென்று காண்புழிப்
 புதவகத் துறைந்தோர் போம்பொழுது என்றென
 உதயண குமரனை ஓர்த்துறச் சொல்லி
 நூலறி வாளர் நால்வரை விட்டபின்
 உவாக்கடல் பரப்பின் ஒல்லென மயங்கி
 விழாக்கொண் டன்றால் வியன்நகர் விரைந்தென்.