பக்திப் பாடல்கள்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே!
மக்கள் மதங்கள் வழியாக இறைவனை வணங்குகிறார்கள். மதம் என்பது மக்கள் கூட்டமாகச் சேர்ந்து இறைவனை வணங்க ஏற்படுத்திக் கொண்ட அமைப்பு ஆகும். இறைவனை வணங்குவது பக்தி எனப்படுகிறது. இறைவனை வணங்குவதற்குப் பல வழிகள் உள்ளன. மனதால் இறைவனை வணங்கலாம்; பாடல்கள் பாடி வணங்கலாம்; கைகள் கூப்பி வணங்கலாம்; உடலால் விழுந்து வணங்கலாம். இறைவனை வணங்க இதுபோலப் பல வழிகள் உள்ளன.
உலகில் பல மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வோர் இறைவன் உண்டு. ஒவ்வோர் இறைவனை வணங்கவும் பக்திப் பாடல்கள் பலப்பல உள்ளன. இவ்வகையில் தமிழ்மொழியில் பாடப் பெற்ற சில பக்திப் பாடல்கள் இங்கு உங்களுக்குப் பாடமாக உள்ளன.