பக்திப் பாடல்கள்

அல்லா

பாட அறிமுகம்
Introduction to Lesson


திருக்குர்ஆன் நூல்

"வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே. அவனுக்கு உருவம் இல்லை" என்ற கருத்தை உடையது இசுலாம் சமயம். இறைவனை அல்லா என்ற அரபு மொழிச் சொல்லால் குறிப்பிடுவர். இச்சமயம் சார்ந்த இலக்கியங்களும் தமிழில் உள்ளன. அவற்றுள் அண்ணல் நபிகள் நாயகத்தின் வாழ்வை அழகுறப் பாடும் சீறாப்புராணம் தலை சிறந்ததாகக் கருதப்பெறுகின்றது. ‘சீறத்’ என்ற அரபுச் சொல் ‘சீறா’ என்று ஆயிற்று. ‘சீறத்’ என்றால் வரலாறு என்று பொருள். புராணம் என்றால் பழமை என்று பொருள்.

இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள கடவுள் வாழ்த்துப் படலத்தில் உள்ள ஒரு பாடல் இங்குப் பாடமாக உள்ளது.