பக்திப் பாடல்கள்

சிவன்

பாட ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளைப் பாடினார்.

இவர் முதலில் சமண சமயத்தைச் சார்ந்து இருந்தார். அப்போது இவருக்கு வயிற்றுவலி வந்தது. அது இவருக்கு மிகவும் துன்பம் தந்தது. அதனை நீக்கச் சைவ சமயம் உதவியது. இதனால் சைவ சமயத்திற்கு மாறினார்.

திருநாவுக்கரசர் ஒரு முறை சுண்ணாம்புக் காளவாயில் இடப்பட்டார். அதன் கடுமையான வெப்பத்தால் திருநாவுக்கரசர் இன்னலுக்கு ஆளானார். அப்பொழுது சிவபெருமான் அருளால் சுண்ணாம்புக் காளவாய் குளிர்ச்சி ஊட்டியது என்றும் சொல்லுவார்கள். அப்பொழுது இவர் பாடிய பத்துப் பாடல்களில் முதல் பாடல் உங்களுக்கும் பாடமாக உள்ளது.