பக்திப் பாடல்கள்

இயேசு பெருமான்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  வீரமாமுனிவர் தமிழ்நாட்டிற்கு எச்சமயத்தைப் பரப்ப வந்தார்?

அ) சைவம்

ஆ) வைணவம்

இ) கிறித்தவம்

ஈ) சமணம்

இ) கிறித்தவம்

2.  திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் எம்மொழியில் வீரமாமுனிவர் மொழி பெயர்த்தார்?

அ) கிரேக்கம்

ஆ) இலத்தீன்

இ) ஈபுரு

ஈ) பிரெஞ்சு

ஆ) இலத்தீன்

3.  தேம்பாவணி என்ற நூல் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?

அ) இயேசுபெருமான்

ஆ) சூசையப்பர்

இ) மேரியன்னை

ஈ) அருளப்பர்

ஆ) சூசையப்பர்

4.  வான் உலகத்தவர்கள் மலர்க்கொத்துக் கொண்டு எவரை வணங்கினர்?

அ) அல்லாவை

ஆ) இயேசுவை

இ) ஈசனை

ஈ) இறைவனை

ஆ) இயேசுவை

5. வீரமாமுனிவரின் தாய்நாடு எது?

அ) இந்தியா

ஆ) தமிழ்நாடு

இ) இத்தாலி

ஈ) இங்கிலாந்து

இ) இத்தாலி

6.  சதுர் அகராதி என்பது எவ்வகை நூல்?

அ) இலக்கணம்

ஆ) இலக்கியம்

இ) அகரமுதலி

ஈ) கணக்கு

இ) அகரமுதலி

7.  வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

அ) ஜி.யு.போப்

ஆ) சோசப் பெசுகி

இ) அர்னால்டு

ஈ) சான்பால்கு

ஆ) சோசப் பெசுகி

8.  வீரமாமுனிவர் தமிழ்நாட்டில் யாரைப்போல் வாழ்ந்தார்?

அ) மன்னர்கள்

ஆ) புலவர்கள்

இ) வள்ளல்கள்

ஈ) துறவிகள்

ஈ) துறவிகள்

9.  இயேசு பெருமான் எதில் அறையப் பெற்றார்?

அ) மரத்தில்

ஆ) ஏணியில்

இ) சிலுவையில்

ஈ) சுவரில்

இ) சிலுவையில்

10.  வீரமாமுனிவர் நீக்கிய உணவு எது?

அ) புலால்

ஆ) காய்கறி

இ) மீன்

ஈ) பழங்கள்

அ) புலால்