பக்திப் பாடல்கள்

சிவன்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  போற்றி என்பதற்கு ---------- என்பது பொருள்.

போற்றி என்பதற்கு வணங்குதல்என்பது பொருள்.

2.  கன்றைக் கம்பு போல் அடித்து அழித்தவன் ----------.

கன்றைக் கம்பு போல் அடித்து அழித்தவன் திருமால்.

3.  ஆண்டாள் பாடியது ------------------.

ஆண்டாள் பாடியது திருப்பாவை

4.  குன்றைக் குடையாகப் பிடித்தவன் ------------.

குன்றைக் குடையாகப் பிடித்தவன் திருமால்

5.  தஆழ்வார்கள் மொத்தம் ------------- பேர்.

ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரண்டு பேர்

6.  ஆண்டாளின் மற்றொரு பெயர் -------------

ஆண்டாளின் மற்றொரு பெயர் கோதை

7.  நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ----------- என்றும் அழைக்கப் பெறுகிறது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திராவிட வேதம் என்றும் அழைக்கப் பெறுகிறது.

8.  இலங்கையை ஆட்சி புரிந்த மாமன்னர் -------------

இலங்கையை ஆட்சி புரிந்த மாமன்னர் இராவணன்

9.  திருமால் உலகத்தை ------------- அடிகளால் அளந்தான்.

திருமால் உலகத்தை மூன்றுஅடிகளால் அளந்தான் .

10.  வண்டி வடிவத்தில் வந்து திருமாலுடன் போரிட்டவன் -------------

வண்டி வடிவத்தில் வந்து திருமாலுடன் போரிட்டவனன் சகடாசுரன்