பக்திப் பாடல்கள்

அல்லா

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  திரு என்பதன் பொருள் என்ன?

அ) உயர்வு

ஆ) செல்வம்

இ) அழகு

ஈ) மேன்மை

அ) உயர்வு

2.  அணு என்பதன் பொருள் என்ன?

அ) நுண்தூள்

ஆ) தினை

இ) துகள்

ஈ) சிறிய பொருள்

ஈ) சிறிய பொருள்

3.  மரு என்பதன் பொருள் என்ன?

அ) மச்சம்

ஆ) மணம்

இ) மற்றொன்று

ஈ) மருக்கொழுந்து

ஆ) மணம்

4.  உமறுப்புலவருக்கு உதவிய வள்ளல் பெயர் என்ன?

அ) சடையப்ப வள்ளல்

ஆ) பாரி வள்ளல்

இ) சீதக்காதி

ஈ) வள்ளலார்

இ) சீதக்காதி

5.  இசுலாம் சமயம் இறைவனை என்ன பெயரால் சுட்டுகிறது?

அ) அல்லா

ஆ) சிவன்

இ) ஏசு

ஈ) திருமால்

இ) அல்லா

6.  இசுலாம் சமய நெறியில் இறைவனுக்கு எது இல்லை?

அ) தொழுகை

ஆ) உருவம்

இ) நோன்பு

ஈ) வழிபாடு

ஆ) உருவம்

7.  இசுலாம் சமயத்தின் கோட்பாடு என்ன?

அ) பலதெய்வம்

ஆ) சிறுதெய்வம்

இ) பெருந்தெய்வம்

ஈ) இறைவன் ஒருவனே

ஈ) இறைவன் ஒருவனே

8.  சீறாப்புராணம் இலக்கியத்தின் வகை எது?

அ) சிற்றிலக்கியம்

ஆ) காப்பிய இலக்கியம்

இ) நாடக இலக்கியம்

ஈ) நீதி இலக்கியம்

ஆ) காப்பிய இலக்கியம்

9.  கருவிலும் கருவாய் உள்ளவன் யார்?

அ) இறைவன்

ஆ) கடவுள்

இ) அல்லா

ஈ) ஆண்டவன்

இ) அல்லா

10.  உமறுப்புலவர் எவரிடம் தமிழ் பயின்றார்?

அ) காளமேகப் புலவர்

ஆ) கடிகை முத்துப் புலவர்

இ) ஆறுமுக நாவலர்

ஈ) மறைமலை அடிகள்

ஆ) கடிகை முத்துப் புலவர்