பக்திப் பாடல்கள்

திருமால்

பாட ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


ஆண்டாள்

பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாள் மட்டுமே பெண். இவர் திருமாலையே வணங்கியவர்; பாடியவர். அவனையே திருமணம் செய்து கொண்டவர். இவருக்கு 'கோதை', 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என்ற வேறு பெயர்களும் உண்டு.

திருமாலைத் திருமணம் செய்து கொள்வதற்காக இவர் மார்கழி மாதத்தில் நோன்பு இருந்தார். அதற்குப் 'பாவை நோன்பு’ என்று பெயர். பாவை என்றால் பெண் என்று பொருள். பெண்கள் செய்யும் நோன்பு பாவை நோன்பு ஆகும். அந்த நோன்பின்போது இவர் பாடல்கள் பாடினார். அவை திருப்பாவை எனப்படும். நாச்சியார் திருமொழியும் இவரால் இயற்றப் பெற்றது. இவர் 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.