சிவன்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. திருநாவுக்கரசர் ................... என்றும் அழைக்கப் பெறுகிறார்.
திருநாவுக்கரசர் அப்பர்என்றும் அழைக்கப் பெறுகிறார்.
2. அப்பர் ...................... சூடி இறைவனை வணங்கினார்.
அப்பர் பாமாலை சூடி இறைவனை வணங்கினார்.
3. இறைவன் ..................... போன்று இனிமையானவன் என்கிறார் அப்பர்.
இறைவன் வீசு தென்றல் போன்று இனிமையானவன் என்கிறார்.
4. குளிர்ந்த பொய்கையில் வண்ண மலர்களும் .................... இருந்தன.
குளிர்ந்த பொய்கையில் வண்ண மலர்களும் வண்டுகளும்இருந்தன.
5. திருநாவுக்கரசர் ............. சமயத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்.
திருநாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்.
6. வீணை என்பது ஒர் ................ கருவி ஆகும்.
வீணை என்பது ஒரு இசைக்கருவி ஆகும்.
7. சிவபெருமானின் திருவடிகள் வீணை எழுப்பும் இசைபோல் ............... அளிப்பன.
சிவபெருமானின் திருவடிகள் வீணை எழுப்பும் இசைபோல் இன்பம் அளிப்பன்.
8. திருநாவுக்கரசர் ........... திருமுறைகளைப் பாடினார்.
திருநாவுக்கரசர் நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளைப் பாடினார்.
9. சைவத் திருமுறைகள் மொத்தம் .................... ஆகும்.
சைவத் திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டுஆகும்.
10. சுண்ணாம்புக் காளவாயில் இருந்து அப்பர் சிவபெருமானின் திருவருளால் முழுநிலவாய்க் ......................... பெற்றார்.
சுண்ணாம்புக் காளவாயில் இருந்து அப்பர் சிவபெருமானின் திருவருளால் முழுநிலவாய்க் குளிர்ச்சிபெற்றார்.