திருமால்
பாடல்
Poem
திருமால்
அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்றுஅங்குத் தென்இலங்கை செற்றாய் திறல் போற்றி !
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி !
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி !
குன்று குடையா எடுத்தாய் குணம்போற்றி !
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி !
என்றுஎன்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கு-ஏலோர் எம்பாவாய்!
- ஆண்டாள்
