திருமால்
பாடல் கருத்து
Theme of the Poem
திருமாலை ஆண்டாள் வணங்குகிறாள். அவ்வாறு அவள் வணங்கும் பொழுது அவனது வீரச் செயல்களைப் புகழ்ந்து கூறி வணங்குகிறாள்.
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றிமாவலி என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் இந்திரன் போன்றவர்களுக்குப் பல துன்பங்கள் செய்தான். அவனை அடக்கத் திருமால் வாமனன் என்ற சிறிய மனிதனாக உருவெடுத்து அவனிடம் சென்றான். மாவலி மன்னனிடம் மூன்று அடி நிலம் வரம் கேட்டான். மாவலியும் தருவதாகக் கூறினான்.
திருமால் சிறிய மனித வடிவத்தை மாற்றினான். வானுரு ஆக்கினான்.திருமால் தன் காலின் ஓர் அடியால் மண் உலகை அளந்தான். மற்றோர் அடியால் வான் உலகத்தை அளந்தான். மூன்றாவது அடியை வைக்க இடம் இல்லை. எனவே மாவலி மன்னனின் தலைமீது கால் வைத்தான் திருமால்.இவ்வாறு உலகை அளந்த திருமாலைப் போற்றுவோம்.
தென்இலங்கை செற்றாய் திறல் போற்றிதெற்கில் உள்ள இலங்கையை இராவணன் என்ற மன்னன் ஆண்டான். இவனைத் திருமால் இராமனாகச் சென்று போரில் அழித்தான்.அத்தகைய திருமாலைப் போற்றுவோம்.
பொன்றச் சகடம் உதைத்தாய் போற்றிஒருமுறை கண்ணன் (திருமால்) தூங்கிக் கொண்டு இருந்தான். கண்ணனை அழிக்கச் சகடாசுரன் என்பவன் சிறிய வண்டி வடிவத்தில் வந்தான். அவனைக் காலால் உதைத்து அழித்த கண்ணனைப் போற்றுவோம்.
கன்றைக் குணிலா எறிந்தாய் கழல்போற்றிகண்ணனை அழிக்கப் பசுமாட்டின் கன்று வடிவத்தில் அசுரன் ஒருவன் வந்தான். அவன் பெயர் வட்டாசுரன் ஆகும். கன்று உருவத்தில் இருந்த அவனைப் பின்னங்கால்களைப் பற்றித் தூக்கிக் கண்ணன் ஒரு விளாமரத்தின் மீது அடித்தான். அவன் இறந்தான். அவனை அழித்தது மட்டும் அன்றி,அவனை ஒரு குறுந்தடியைப் போலப் பயன்படுத்திக் விளங்கனிகளையும் உதிர்த்தான்.அவனைப் போற்றுவோம்.
குன்று குடையாய் எடுத்தாய் போற்றிகண்ணனையும் அவனுடன் இருப்பவர்களையும் அழிக்கும்படி, கடும் மழை பெய்தது. கண்ணன் வாழ்ந்த ஊரும், வீடும் அழிந்தன. அப்போது கண்ணன் தன் கைவிரலால் கோவர்த்தனம் என்ற சிறிய மலை ஒன்றைத் தூக்கினான்.அதைக் குடை போலப் பிடித்தான். அதன்கீழே மக்கள், மாடுகள் நின்றனர். மழையால் இவர்களை அழிக்க முடியவில்லை. இவ்வாறு உயிர்களைக் காத்த திருமாலைப் போற்றுவோம்.
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றிஎதிரிகளை அழிக்கும் கண்ணன் கைகளில் உள்ள வேலைப் போற்றி வணங்குவோம்.
இவ்வாறு எல்லாம் உலகைக் காத்த திருமாலே உன்னை நாங்கள் போற்றுகிறோம். எங்களுக்கு நீ அருள் செய்வாய் என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.