இயேசு பெருமான்
பாட அறிமுகம்
Introduction to Lesson

இயேசு பெருமான்
மனித குலத்திற்காகச் சிலுவை சுமந்தவர் இயேசு பெருமான். இவர் கிறித்தவ சமயத்தினரால் வணங்கப் பெறுபவர். இவரைப் போற்றி வணங்கும் தேம்பாவணிப் பாடல் ஒன்று உங்களுக்குப் பாடமாக உள்ளது.
தேன் போல இனிய பாடல்களை உடைய நூல் தேம்பாவணி எனப்படுகின்றது. தேம்+ பா + அணி எனப் பிரித்து இனிய பாடல்களாலாகிய மாலை எனப் பொருள் காணலாம்.
இது இயேசு பெருமானின் தந்தை சூசையப்பரின் வாழ்க்கையைக் கூறும் நூலாகும்.