சிவன்
பாடல் கருத்து
Theme of the Poem
இறைவன் எனக்குத் தந்தை போன்று அன்பு செய்பவன். அவனது அருள் மிக இனிமையானது. அவனது இரண்டு அடிகளின் கீழே உள்ள நிழல் நல்ல குளிர்ச்சியைத் தருவது. அது, குற்றம் இல்லாத வீணை என்ற இசைக்கருவி தரும் இசை போன்றது; மாலை நேரத்தில் தோன்றும் முழு நிலவு போன்றது; இளவேனில் காலத்தில் வரும் தென்றல் போன்றது; குளிர்ந்த மலர்களும், மலர்களைச் சுற்றும் வண்டுகளும் உள்ள குளத்தில் குளிப்பது போன்றது என்று அப்பர் சிவபெருமானின் அருளைப் பாராட்டுகிறார்.