பக்திப் பாடல்கள்

இயேசு பெருமான்

பாட ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


வீரமாமுனிவர்

தேம்பாவணியை எழுதியவர்வீரமாமுனிவர். இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்ப வந்தவர். இவரின் இயற்பெயர் ‘கான்சுடான்டியுசு ஜோசப் பெசிகி’ ஆகும். தமிழ்நாட்டுத் துறவிகள் போல் காவி உடை அணிந்தும், புலால் உணவை நீக்கியும் வாழ்ந்தவர். இவர் வேதியர் ஒழுக்கம். வேத விளக்கம், தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம், சதுர் அகராதி முதலான நூல்களைப் படைத்துள்ளார். திருக்குறளின் அறத்துப் பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழி மொழி பெயர்த்துள்ளார். இவர் தமிழில் இலக்கிய, இலக்கணங்களை எழுதினார்.