பக்திப் பாடல்கள்

இயேசு பெருமான்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  வீரமாமுனிவர் ------- நாட்டைச் சேர்ந்தவர்.

வீரமாமுனிவர் இத்தாலிநாட்டைச் சேர்ந்தவர்.

2.  வீரமாமுனிவர் எழுதிய நூல் ---------.

வீரமாமுனிவர் எழுதிய நூல் தேம்பாவணி.

3.  தேம்பாவணி -------- வரலாற்றைக் கூறுகிறது.

தேம்பாவணி சூசையப்பர் வரலாற்றைக் கூறுகிறது.

4.  இயேசு பெருமான் மலர்கள் நிறைந்த மரத்தின் ----------, போன்றவர்.

இயேசு பெருமான் மலர்கள் நிறைந்த மரத்தின் நிழல்போன்றவர்.

5.  ------ உலகத்தவர்களும், ------- உலகத்தவர்களும் ஏசுபெருமானைப் போற்றுகின்றனர்.
விண், உலகத்தவர்களும், மண்உலகத்தவர்களும் ஏசுபெருமானைப் போற்றுகின்றனர்.

6.  சதுர் அகராதி இயற்றியவர் -------

சதுர் அகராதி இயற்றியவர் வீரமாமுனிவர்.

7.  சிவமலி தனி முதல் -------

சிவமலி தனி முதல் இயேசு பெருமான்

8.  வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல் -------

வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல் தொன்னூல் விளக்கம்

9.  சூசையப்பர் இயேசு பெருமானின் -------

சூசையப்பர் இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை

10.  இயேசு நாதர் ------- அறையப் பெற்றார்.

சஇயேசு நாதர் சிலுவையில்அறையப் பெற்றார்.