பக்திப் பாடல்கள்

திருமால்

பாட அறிமுகம்
Introduction to Lesson


திருமால்

வைணவம் - என்பது மற்றொரு சமயம். சிவனை வணங்கும் சமயம் சைவம். அதைப்போல விசுணுவை வணங்கும் சமயம் வைணவம். இதன் இறைவன் தமிழில் திருமால் எனப்படுகிறார். இந்த இறைவனுக்குசைவம். இவனைப் பற்றிப் பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய தொகுப்பு கண்ணன், மாயோன் போன்ற பல பெயர்கள் உண்டு.

திருமால் பற்றி நான்கு ஆயிரம் தமிழ்ப் பாடல்கள் பாடப்பெற்று உள்ளன. அவை 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' எனப்படுகின்றன.

நாலாயிரம் - நான்காயிரம்

திவ்யம் - இனிமை

பிரபந்தம் - சிற்றிலக்கியம்

திருமாலின் மீது பாடப்பெற்ற இனிமையான நான்காயிரம் பாக்களால் ஆன சிற்றிலக்கியம் எனப்படும். இதற்குத் திராவிட வேதம், தமிழ் வேதம் என்ற வேறு பெயர்களும் உண்டு.

இவற்றைப் பாடியவர்கள் பன்னிரண்டு பேர். இவர்கள் ஆழ்வார்கள் எனப்படுகிறார்கள். இவர்களுள் ஒருவர் ஆண்டாள். இவர் எழுதிய பாடல் ஒன்று இங்குப் பாடமாக உள்ளது.