பக்திப் பாடல்கள்

அல்லா

பாடல் கருத்து
Theme of the Poem


அல்லா - உயர்விலும் உயர்வானவர்.

அல்லா - உண்மைப் பொருள்களிலும் உண்மையானவர்.

அல்லா - அறிவினில் சிறந்த அறிவானவர்.

அல்லா - நல்ல மணத்திலும் நறுமணம் மிக்கவர்.

அல்லா - அணு என்ற சிறிய பொருளிலும் சிறிய பொருளாக இருப்பவர்.

அல்லா - மதிப்பிட முடியாத பேரொளி போன்றவர்.

அல்லா - ஒப்புமை கூறமுடியாதவர்.

அல்லா - உலகின் எல்லா அழகுகளை விடவும் சிறந்த அழகாக இருப்பவர்.

அல்லா - உலகின் தோன்றிய, தோன்றும் எல்லா உயிர்களின் கருவிலும் கருவாக இருப்பவர்.

இவ்வாறு எல்லாவற்றிலும் இருந்து உலகைக் காக்கும் படைப்பாளனை நம் இதயத்தில் பொருந்தச் செய்வோம். இதுவே என் உள்ளத்தின் கருத்து.