அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

பகடு ... பெருமை 163
பகடு ... எருமைக்கிடாய் 175
பகழி ... அம்பு 110
படர்கூர்ந்திசின் ... துயர்மிக்கேன் 264
படலை ... இலை விரவித்தொடுத்த மாலை 117
பணி ... பாம்பு 150
பணை ... மூங்கில் 250
பணை ... மருதம் 78, 202
பணை ... பெருப்பு 163, 167
பண்டி ... வயிறு 173
பம்புதல் ... செறிதல் 139
பயோதரம் ... நகில், மேகம் 245
பரசு ... மழு 129
பரசுதல் ... வழுத்துதல் 129
பரசோன் ... மழுவாளியாகிய சிவபெருமான் 257
பரித்தல் ... விரைதல் 285
பரிதல் ... அறுத்தல் 166
பரிவு ... துயர் 171
பவம் ... பிறப்பு 129
பறநாடு ... பறம்புநாடு 113
பறை ... பறத்தல் 169
பனிப்பு ... நடுக்கம் 178
பாய்மா ... குதிரை 110
பார்ப்பு ... குஞ்சு 85
பானல் ... நீலோற்பலம் 198
பிணா ... பெண் 212
பிணை ... பெண்மான் 77
பிண்டி ... அசோகு 146, 166, 234
பில்குதல் ... பிலிற்றுதல் 129
பீர்ங்க ... பசலை நிறம்பட 241, 247
புங்கவன் ... மேலோன் 179
புணரி ... கடல் 172
புண்டரீகபுரம் ... சிதம்பரம் 116
புண்டரீகம் ... தாமரை 116
புதல் ... புதர் 155
புதவு ... கதவு 181
புரந்தரன் ... இந்திரன் 168
புரம் ... உடல் 116, 173
புரைதல் ... ஒத்தல் 55, 170
புலம்பு ... தனிமை 78, 202
புறவம் ... முல்லை 172
புறவு ... முல்லை 154
புற்புதம் ... நீர்க்குமிழி 181
பூழி ... மண்ணளை 108
பூளை ... பஞ்சித்துய் 242
பேது ... மயக்கம் 117
பைதல் ... பசலை நோய் 281
பைப்பைய ... மெல்லமெல்ல 281
பொதுவில் ... மன்றம் 140
பொய்தல் ... மகளிர் விளையாட்டு 195, 284
பொதுளுதல் ... நிறைதல் 285
பொல்லாமணி ... துளையிடப் பெறாத மணி 197
போதம்படரும் ... போது அம்பு அடரும், போதம் (அறிவு)படரும் 117
போத்து ... ஆண்பறவை 206
போத்து ... பொத்து, குற்றம் 110
போந்தை ... பனம் பூ 286
பௌவம் ... கடல் 242, 245, 281