முகப்பு |
நெய்தல் |
4. நெய்தல் |
நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே; |
||
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி, |
||
அமைதற்கு அமைந்த நம் காதலர் |
||
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே. | உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - காமஞ்சேர் குளத்தார் |
5. நெய்தல் |
அதுகொல், தோழி! காம நோயே?- |
||
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை, |
||
உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர், |
||
மெல்லம் புலம்பன் பிரிந்தென, |
||
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே. | உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நரி வெரூஉத்தலையார் |
6. நெய்தல் |
நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து, |
||
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று, |
||
நனந்தலை உலகமும் துஞ்சும்; |
||
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது. - பதுமனார் |
49. நெய்தல் |
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து |
||
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப! |
||
இம்மை மாறி மறுமை ஆயினும். |
||
நீ ஆகியர் எம் கணவனை; |
||
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. | உரை | |
தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார் |
51. நெய்தல் |
கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர் |
||
நூல் அறு முத்தின் காலொடு பாறித் |
||
துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை |
||
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்; |
||
எந்தையும் கொடீஇயர்வேண்டும்; |
||
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே. | உரை | |
வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவுகூறியது - குன்றியனார் |
55. நெய்தல் |
மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப் |
||
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ, |
||
கையற வந்த தைவரல் ஊதையொடு |
||
இன்னா உறையுட்டு ஆகும் |
||
சில் நாட்டு அம்ம-இச் சிறு நல் ஊரே. | உரை | |
வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும்' எனத் தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. - நெய்தற் கார்க்கியர் |
57. நெய்தல் |
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன |
||
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப் |
||
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு, |
||
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து, |
||
இருவேம் ஆகிய உலகத்து, |
||
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே. | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
92. நெய்தல் |
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து- |
||
அளியதாமே-கொடுஞ் சிறைப் பறவை, |
||
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த |
||
பிள்ளை உள்வாய்ச் செரீஇய |
||
இரை கொண்டமையின், விரையுமால் செலவே. | உரை | |
காமம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு, சொல்லியது. - தாமோதரன் |
97. நெய்தல் |
யானே ஈண்டையேனே; என் நலனே |
||
ஆனா நோயொடு கானலஃதே. |
||
துறைவன் தம் ஊரானே; |
||
மறை அலர் ஆகி மன்றத்தஃதே. | உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வெண்பூதி |
102. நெய்தல் |
உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது |
||
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி |
||
வான் தோய்வற்றே, காமம்; |
||
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே. | உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, 'யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?' என்றது.- ஒளவையார் |
103 நெய்தல் |
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல், |
||
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய், |
||
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத் |
||
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும் |
||
வாரார் போல்வர், நம் காதலர்; |
||
வாழேன் போல்வல்-தோழி!-யானே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வாயிலான் தேவன் |
109. நெய்தல் |
முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை |
||
புணரி இகுதிரை தரூஉம் துறைவன் |
||
புணரிய இருந்த ஞான்றும், |
||
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே! | உரை | |
தலைவன் சிறைப்புறமாக, தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்ற, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது. - நம்பி குட்டுவன் |
114. நெய்தல் |
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி, |
||
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!- |
||
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும், |
||
ஆரல் அருந்த வயிற்ற |
||
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே, | உரை | |
இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது. - பொன்னாகன் |
117. நெய்தல் |
மாரி ஆம்பல் அன்ன கொக்கின் |
||
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு |
||
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர் |
||
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன் |
||
வாராது அமையினும் அமைக! |
||
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே. | உரை | |
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - குன்றியனார் |
118. நெய்தல் |
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய |
||
நள்ளென வந்த நார் இல் மாலை, |
||
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர், |
||
'வருவீர் உளீரோ?' எனவும், |
||
வாரார்-தோழி!-நம் காதலோரே. | உரை | |
வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது.- நன்னாகையார் |
122. நெய்தல் |
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன |
||
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே |
||
வந்தன்று, வாழியோ, மாலை! |
||
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே! | உரை | |
தலைமகள் பொழுது கண்டு அழிந்தது. - ஓரம்போகியார் |
123. நெய்தல் |
இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல், |
||
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறை, |
||
கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப, |
||
இன்னும் வாரார்; வரூஉம், |
||
பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே, | உரை | |
பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து, தலைமகட்குச் சொல்லியது. - ஐயூர் முடவன் |
125.நெய்தல் |
இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே, |
||
உளெனே வாழி-தோழி!-சாரல் |
||
தழை அணி அல்குல் மகளிருள்ளும் |
||
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல் |
||
பறை வலம் தப்பிய பைதல் நாரை |
||
திரை தோய் வாங்கு சினை இருக்கும் |
||
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே, | உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது. - அம்மூவன். |
128. நெய்தல் |
குண கடல் திரையது பறை தபு நாரை |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை |
||
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச் |
||
சேயள் அரியோட் படர்தி; |
||
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே. | உரை | |
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர் |
145. குறிஞ்சி |
உறை பதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி- |
||
கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி, |
||
ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள் |
||
துஞ்சாது உறைநரொடு உசாவாத் |
||
துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே. | உரை | |
வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கொல்லன் அழிசி |
163.நெய்தல் |
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர் |
||
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன |
||
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை. |
||
வெள் வீத் தாழை திரை அலை |
||
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே? | உரை | |
தன்னுள் கையாறு எய்திடு கிளவி - அம்மூவன் |
166. நெய்தல் |
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஊரோ நன்றுமன், மரந்தை; |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே. | உரை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |
172. நெய்தல் |
தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல் |
||
பழுமரம் படரும் பையுள் மாலை, |
||
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர் |
||
தமியர் ஆக இனியர்கொல்லோ? |
||
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த |
||
உலை வாங்கு மிதி தோல் போலத் |
||
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே. | உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கச்சிப்பேட்டு நன்னாகையார் |
175. நெய்தல் |
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி, |
||
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை, |
||
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம் |
||
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு |
||
இரங்கேன்-தோழி!-'ஈங்கு என் கொல்?' என்று, |
||
பிறர்பிறர் அறியக் கூறல் |
||
அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே? | உரை | |
பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன். |
177. நெய்தல் |
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி, |
||
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே; |
||
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை |
||
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர் |
||
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப் |
||
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் |
||
தணப்பு அருங் காமம் தண்டியோரே? | உரை | |
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன் |
184. நெய்தல் |
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை; |
||
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே- |
||
இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு, |
||
ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்- |
||
மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை |
||
நுண் வலைப் பரதவர் மட மகள் |
||
கண் வலைப் படூஉம் கானலானே. | உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் |
195. நெய்தல் |
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப் |
||
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை, |
||
யாண்டு உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்? |
||
'இன்னாது, இரங்கும்' என்னார் அன்னோ- |
||
தைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச் |
||
செய்வுறு பாவை அன்ன என் |
||
மெய் பிறிதாகுதல் அறியாதோரே! | உரை | |
பிரிவிடைப் பருவ வரவின்கண் கிழத்தி மெலிந்து கூறியது. - தேரதரன். |
197. நெய்தல் |
யாது செய்வாம்கொல்-தோழி!-நோதக |
||
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை |
||
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய |
||
கூதிர் உருவின் கூற்றம் |
||
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே? | உரை | |
பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கச்சிப்பேட்டு நன்னாகையார். |
205. நெய்தல் |
மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க |
||
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு, |
||
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி, |
||
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப, |
||
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்; |
||
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என் |
||
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே? | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன் |
212. நெய்தல் |
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் |
||
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப, |
||
காண வந்து, நாணப் பெயரும்; |
||
அளிதோ தானே, காமம்; |
||
விளிவதுமன்ற; நோகோ யானே. | உரை | |
குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது. - நெய்தற் கார்க்கியன் |
219. நெய்தல் |
பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர் |
||
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே; |
||
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே; |
||
'ஆங்கண் செல்கம் எழுக' என, ஈங்கே, |
||
வல்லா கூறியிருக்கும்; அள் இலைத் |
||
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு |
||
இடம்மன்-தோழி!-'எந் நீரிரோ?' எனினே. | உரை | |
சிறைப்புறம். - வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார். |
226. நெய்தல் |
பூவொடு புரையும் கண்ணும், வேய் என |
||
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என |
||
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும் |
||
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும் |
||
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் |
||
குருகு என மலரும் பெருந் துறை |
||
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன் |
227. நெய்தல் |
பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி |
||
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த |
||
கூழை நெய்தலும் உடைத்து, இவண்- |
||
தேரோன் போகிய கானலானே. | உரை | |
சிறைப்புறம். - ஓத ஞானி |
228. நெய்தல் |
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை, |
||
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் |
||
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில், |
||
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து |
||
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும், |
||
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே. | உரை | |
கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் |
230. நெய்தல் |
அம்ம வாழி, தோழி! கொண்கன்- |
||
தான் அது துணிகுவனல்லன்; யான் என் |
||
பேதைமையால் பெருந்தகை கெழுமி, |
||
நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?- |
||
வயச் சுறா வழங்கு நீர் அத்தம் |
||
தவச் சில் நாளினன் வரவு அறியானே. | உரை | |
வலிதாகக் குறிக் குறை நயப்பித்தது. - அறிவுடை நம்பி |
236. நெய்தல் |
விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ |
||
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!- |
||
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை |
||
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை |
||
வம்ப நாரை சேக்கும் |
||
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிவான். 'இவள் வேறு படாமை ஆற்றுவி' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது. - நரிவெரூஉத்தலையார். |
243. நெய்தல் |
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின் |
||
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி, |
||
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் |
||
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை |
||
உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே. | உரை | |
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது. - நம்பி குட்டுவன் |
245. நெய்தல் |
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் |
||
நலம் இழந்ததனினும், நனி இன்னாதே- |
||
வாள் போல் வாய கொழு மடல் தாழை |
||
மாலை வேல் நாட்டு வேலி ஆகும் |
||
மெல்லம் புலம்பன் கொடுமை |
||
பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே. | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மாலை மாறன் |
246. நெய்தல் |
'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை |
||
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி, |
||
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர் |
||
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு, |
||
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும் |
||
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் |
||
இளையரும் மடவரும் உளரே; |
||
அலையாத் தாயரொடு நற்பாலோரே. | உரை | |
சிறைப்புறம். - கபிலர் |
248. நெய்தல் |
அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு |
||
உறுக என்ற நாளே குறுகி, |
||
ஈங்கு ஆகின்றே-தோழி!-கானல் |
||
ஆடு அரை புதையக் கோடை இட்ட |
||
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை |
||
குறிய ஆகும் துறைவனைப் |
||
பெரிய கூறி யாய் அறிந்தனளே. | உரை | |
வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சன் |
269. நெய்தல் |
சேயாறு சென்று, துனைபரி அசாவாது, |
||
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல- |
||
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் |
||
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் |
||
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய |
||
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், |
||
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு, |
||
'இனி வரின் எளியள்' என்னும் தூதே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது - கல்லாடனார் |
290. நெய்தல் |
'காமம் தாங்குமதி' என்போர்தாம் அஃது |
||
அறியலர்கொல்லோ? அனை மதுகையர் கொல்? |
||
யாம், எம் காதலர்க் காணேம்ஆயின், |
||
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க் |
||
கல் பொரு சிறு நுரை போல, |
||
மெல்லமெல்ல இல்லாகுதுமே. | உரை | |
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது. - கல்பொருசிறுநுரையார். |
294. நெய்தல் |
கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும், |
||
தொடலை ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும், |
||
நொதுமலர் போலக் கதுமென வந்து, |
||
முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே; |
||
துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல் |
||
திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு அசைத்த பசுங் குழைத் |
||
தழையினும், உழையின் போகான்; |
||
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே, | உரை | |
பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.- அஞ்சில் ஆந்தை |
296. நெய்தல் |
அம்ம வாழி-தோழி!-புன்னை |
||
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை |
||
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில் |
||
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் |
||
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று, |
||
கடிய கழறல் ஓம்புமதி-'தொடியோள் |
||
இன்னள் ஆகத் துறத்தல் |
||
நும்மின் தகுமோ?' என்றனை துணிந்தே. | உரை | |
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன் |
299. நெய்தல் |
இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப் |
||
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல், |
||
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல், |
||
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற் |
||
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல் |
||
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன் |
||
மணப்பின் மாண்நலம் எய்தி, |
||
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே? | உரை | |
சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெண்மணிப் பூதி |
303. நெய்தல் |
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு |
||
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல் |
||
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ! |
||
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப் |
||
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும் |
||
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல் |
||
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே. | உரை | |
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன் |
304. நெய்தல் |
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி |
||
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ் |
||
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக் |
||
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, |
||
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து |
||
வெண் தோடு இரியும் வீ ததை கானல், |
||
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு |
||
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே. | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன் |
306. நெய்தல் |
'மெல்லிய, இனிய, மேவரு தகுந, |
||
இவை மொழியாம்' எனச் சொல்லினும், அவை நீ, |
||
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன் |
||
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் |
||
வண்டு வீழ்பு அயரும் கானல்- |
||
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே? | உரை | |
காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
310. நெய்தல் |
புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; |
||
கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும், |
||
நம்மே போலும் மம்மர்த்து ஆகி, |
||
எல்லை கழியப் புல்லென்றன்றே; |
||
இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை |
||
தண்ணிய கமழும் ஞாழல் |
||
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே. | உரை | |
வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது. - பெருங்கண்ணன் |
311. நெய்தல் |
அலர் யாங்கு ஒழிவ-தோழி!-பெருங் கடல் |
||
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும், |
||
நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர் |
||
யான் கண்டன்றோஇலனே; பானாள் |
||
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத் |
||
தாது சேர் நிகர்மலர் கொய்யும் |
||
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே? | உரை | |
அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - சேந்தன்கீரன் |
312. குறிஞ்சி |
இரண்டு அறி கள்வி நம் காதலோளே: |
||
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன் |
||
முள்ளூர்க் கானம் நாற வந்து, |
||
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்; |
||
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து, |
||
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி, |
||
அமரா முகத்தள் ஆகித் |
||
தமர் ஓரன்னள், வைகறையானே. | உரை | |
இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது. - கபிலர் |
316. நெய்தல் |
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும், |
||
நோய் மலி வருத்தம் அன்னை அறியின், |
||
உளெனோ வாழி-தோழி!-விளியாது, |
||
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை |
||
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட, |
||
ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரி |
||
ஓங்கு வரல் விரிதிரை களையும் |
||
துறைவன் சொல்லோ பிற ஆயினவே? | உரை | |
வரைவிடை 'வேறு படுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- தும்பி சேர் கீரன் |
318. நெய்தல் |
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின், |
||
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய், |
||
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன் |
||
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று |
||
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப் |
||
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள் |
||
பிழையா வஞ்சினம் செய்த |
||
களவனும், கடவனும், புணைவனும், தானே. | உரை | |
கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - அம்மூவன் |
320. நெய்தல் |
பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின் |
||
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு, |
||
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன், |
||
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
||
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் |
||
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் |
||
புன்னைஅம் சேரி இவ் ஊர் |
||
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே. | உரை | |
அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.- தும்பிசேர் கீரன் |
324. நெய்தல |
கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை |
||
வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை, |
||
இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின் |
||
நயன் உடைமையின் வருதி; இவள் தன் |
||
மடன் உடைமையின் உவக்கும்; யான் அது, |
||
கவை மக நஞ்சு உண்டாஅங்கு, |
||
அஞ்சுவல்-பெரும!-என் நெஞ்சத்தானே. | உரை | |
செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரா வாராவரைவல்' என்றாற்கு, தோழி அது மறுத்து,வரைவு கடாயது. - கவைமகன் |
325. நெய்தல் |
'சேறும் சேறும்' என்றலின், பண்டைத் தம் |
||
மாயச் செலவாச் செத்து, 'மருங்கு அற்று |
||
மன்னிக் கழிக' என்றேனே; அன்னோ! |
||
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
||
கருங் கால் வெண் குருகு மேயும் |
||
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே. | உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.- நன்னாகையார் |
326. நெய்தல் |
துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர் |
||
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த |
||
சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!- |
||
ஒரு நாள் துறைவன் துறப்பின், |
||
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே, | உரை | |
சிறைப்புறம். |
328. நெய்தல் |
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி |
||
அலவன் சிறு மனை சிதைய, புணரி |
||
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் |
||
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே, |
||
வில் கெழு தானை விச்சியர் பெருமகன் |
||
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர் |
||
புலி நோக்கு உறழ் நிலை கண்ட |
||
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. | உரை | |
வரைவிடை வேறுபடும் கிழத்தியை, 'அவர் வரையும் நாள் அணித்து' எனவும்,'அலர் அஞ்சல்' எனவும் கூறியது. - பரணர் |
334. நெய்தல் |
சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு |
||
எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப, | ||
பனி புலந்து உறையும் பல் பூங் கானல் |
||
இரு நீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம் |
||
இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று |
||
எவனோ-தோழி!-நாம் இழப்பதுவே? | உரை | |
'வரைவிடை ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - இளம் பூதனார் |
340. நெய்தல் |
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து, |
||
நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி, |
||
ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை, |
||
அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல் |
||
கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம் |
||
பெயர்தரப் பெயர்தந்தாங்கு, |
||
வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே. | உரை | |
இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது. - அம்மூவன் |
341. நெய்தல் |
பல் வீ படரிய பசு நனை குரவம் |
||
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச் |
||
சினை இனிது ஆகிய காலையும், காதலர் |
||
பேணார் ஆயினும், 'பெரியோர் நெஞ்சத்துக் |
||
கண்ணிய ஆண்மை கடவது அன்று' என, |
||
வலியா நெஞ்சம் வலிப்ப, |
||
வாழ்வேன்-தோழி!-என் வன்கணானே. | உரை | |
'பருவ வரவின்கண் வேறுபடும்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது- மிளைகிழான் நல் வேட்டன் |
345. நெய்தல் |
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர் |
||
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத் |
||
தங்கினிர்ஆயின், தவறோ-தகைய |
||
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல- |
||
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி |
||
இழுமென ஒலிக்கும் ஆங்கண் |
||
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே? | உரை | |
பகல் வந்து ஒழுகுவானைத் தோழி 'இரா வா' என்றது. - அண்டர் மகன் குறுவழுதி |
349. நெய்தல் |
'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி, |
||
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த் |
||
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம் |
||
கொள்வாம்' என்றி-தோழி!-கொள்வாம்; |
||
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய |
||
கொடுத்து 'அவை தா' எனக் கூறலின், |
||
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே? | உரை | |
பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையனாக, தோழிக்குக் கிழத்தி கூறியது. - சாத்தன். |
351. நெய்தல் |
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள் |
||
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த |
||
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென |
||
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு |
||
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப் |
||
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி |
||
இன் நகை ஆயத்தாரோடு |
||
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே? | உரை | |
தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, 'நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?'என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. - அம்மூவன் |
372. குறிஞ்சி |
பனைத் தலைக்-கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய, |
||
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக் |
||
கணம் கொள் சிமைய உணங்கும் கானல், |
||
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக் |
||
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை |
||
புலர் பதம் கொள்ளா அளவை, |
||
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - விற்றூற்று மூதெயினனார் |
376. நெய்தல் |
மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில் |
||
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப, |
||
வேனிலானே தண்ணியள்; பனியே, |
||
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென, |
||
அலங்கு வெயில் பொதிந்த தாமரை |
||
உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே. | உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- படுமரத்து மோசிக் கொற்றன் |
381. நெய்தல் |
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய் |
||
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது, |
||
பசலை ஆகி, விளிவதுகொல்லோ- |
||
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல், |
||
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி, |
||
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு |
||
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே? | உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனைத் இயற்பழித்தது. |
386. நெய்தல் |
வெண் மணல் விரிந்த வீ ததை கானல் |
||
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே, |
||
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும் |
||
மாலையோ அறிவேன்மன்னே; மாலை |
||
நிலம் பரந்தன்ன புன்கணொடு |
||
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே. | உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- வெள்ளிவீதியார் |
397. நெய்தல் |
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ |
||
நெய்தல் மா மலர்ப் பெய்த போல |
||
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
||
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு, |
||
'அன்னாய்!' என்னும் குழவி போல, |
||
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், |
||
நின் வரைப்பினள் என் தோழி; |
||
தன் உறு விழுமம் களைஞரோ இலளே. | உரை | |
வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது. - அம்மூவன் |
401. நெய்தல் |
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல் |
||
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் |
||
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு |
||
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள், |
||
நக்கு விளையாடலும் கடிந்தன்று, |
||
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே! |
||
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன் | உரை | |