பக்கம் எண் :

அரும்பத அகராதி927

அலம் - துன்பம் 5647
   - அலந்தலை உறுதல் 5647
   - அலம் வரல் - அலமரல் 5026
   'அலமா தெருமா ஆயிடை  
   சுழற்சி'  
அலம்புதல் - அசைதல் 4914 , 5146
   ஒலித்தல் 5460
   கழுவுதல் 5460
அலமரல் - 4888 , 4944, 5945
அலர் தூய் ஆசி சொல்லுதல் 4811
அலர் (தூற்றுதல்) 5241
அலருளோன் - பிரமன் 4868
அலம் பெறுதல்  
அலரி - சூரியன்  
அலர் - பழி 5241, பூ (மலர்)
அலர்தல் - மலர்தல்  
அலை கடல் விடம் 5506
அலைப்புண்ணுதல் 5527
அ(ல்) லோதி - துன்றலோதி 5070
அவ்வழி 5069 , 5310
அவதி - கால எல்லை 5260
அவமதித்து அகறல் 5800
அவலம் - துன்பம் 5626
அவலம் தீர்க்க  
அவி - ஹவிஸ் - அவிசு  
   - வேள்வியில் அளிக்கப்  
   பெறும் உணவு  
அவிஞ்சை - பிணி 5926
அவிதல் - அழிதல் 5409
அவித்தல் - தணியச் செய்தல்  
அவிந்தவர் - இறந்தவர் 5901
அவுணர் - 4884 , 4906, 5197
அழகு இழைத்தல் 4842
அழகைப் பருகல் 4849
அழல் உலாம் கண் 4870
அழல் உற்ற மெழுகு 5310
அழல் விழுந்து முற்றுதல் 5966
அழலுதல் - வருத்துதல் 5232
அழிதல் 5237
   அழிவு உறுதல் 5229
அழுகுரல் முதலியவற்றால்  
   பெருங்குரலுடன் பேசுவதும்  
   கேளாமை 5681
   
அழுத பேர் அமலை அண்டம்  
   உற்றுளது 5709
   
அழுந்தும் மலை - கடலின்  
   ஆழ்கலம் (உவ) 4748
   
அழுவம் - பரப்பு 4748 , 5641
   வெள்ளம் 4748
அள்ளல் - அள்ளுதல் 5005
   - நெருக்கம் 5591 (ஐ)
    - சேறு 4998 , 5591(வை)
அளக்கர் - அளக்க + அரு(ர்)  
   - கடல் 5323
   அளகம் - கூந்தல் 4887 , 5820
அளகேசன் - குபேரன்  
   அளவே சிரித்தல் - ஸ்மிதம் -  
   முறுவல் 4798
அளக வல்லியர் - கூந்தல்  
    விறலியர் 5820
   அளகை - குபேரன் நகர் 5504 , 5517
அளாவுதல் - கலத்தல் 5044
அளி - ஆசை 4917
    கருணை 4773
   வண்டு 5017
   விருப்பம் 4917 , 4918
அளிகள் - வண்டுகள்  
அளி கள் - பெருகுகின்ற மது 5017
   (வை)  
அளித்தல் - கலத்தல் நட்புறல் 4988 , தரல் 4864