அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

வக்கிரன் ... தந்தவக்கிரன் என்ற அசுரன் 168
வட்டொட்டி ... வண் தொட்டி, அழகிய தொட்டில் 281
வதி ... தங்குமிடம் 85, 246
வணங்குதல் ... வளைதல் 221
வணர்தல் ... கடை குழலுதல் 275
வண்மை ... கொடை 56, 165
வதுவை ... திருமணம் 229
வம்பு ... கச்சு 166
வம்பே ... வாளா 128
வருக்கை ... பலா விசேடம் 242
வரை ... மூங்கில் 163
வலம் ... வெற்றி 164
வலவன் ... தேர்ப்பாகன் 284
வலித்தல் ... உறுதி கோடல் 77
வல் ... சூதடு கருவி 87
வல்லியம் ... புலி 273
வழை ... சுர புன்னை மரம் 300
வள்ளுகிர் ... கூர் நகம் 146
வனசம் ... தாமரை 116
வனமாலை ... துளசிமாலை 73
வாணுதல் ... ஒளி வீசும் நெற்றி 86, 147
வாமம் ... அழகு 177
வாமான் ... குதிரை 269
வாய்தல் ... வாசல் 197
வாலெயிறு ... வெண்பல் 57, 103, 114
வாளி ... அம்பு 74
வாள் ... ஒளி 134, 145, 160
விடநாகம் ... பாம்பு 175
விடர் ... முழை 180, 282
விலங்குதல் ... குறுக்கிடுதல் 64, 246
விளர்ப்பு ... வெளுப்பு 165
விளிதல் ... மாய்தல் 127
விளிவு ... மாய்தல் 56
வீட்டுதல் ... அழித்தல் 160
வெதிர் ... மூங்கில் 285
வெரிந் ... முதுகு 162
வெள்ளில் ... விளா 160, 226
வெறி ... வேலனது வெறியாட்டு 301
வெறி ... மணம் 127
வெஃகுதல் ... விரும்புதல் 117
வேய் ... மூங்கில் 77, 163, 229, 251
வேரல் ... மூங்கில் 139, 251
வேரி ... தேன் 72
வேளாண்மை ... உபகாரம் 257
வை ... கூர்மை 127