கங்குல் - இரவு 220
கடகம் 65
கடந்தான் 69
கடல் குட்டம் - கடலின் ஆழமாகிய நீர் (குட்டம் பண்பாகு பெயர்) 173
கடாஅக் களிறு-மதத்தினையுடைய யானை, (கடாஅ-செய்யுளிசை அளபெடை) 170
கடாஅ உருவொடு - ஐயுறாத வடிவோடு 171
கடிபடு - வாசனை பொருந்திய 147
கடிமுகிழ் தண்சினைய - அழகிய (அரும்புகள்) அரும்பும் குளிர்ந்த கிளைகளையுடைய 226
கடு - கடுக்காய் 58
கருங்கை-வன்மையாகிய கை 204
கடுஞ்சினம்-மிக்க கோபம் 140
கடை - கடையானது 250
கடைச்சீர் - மூவகைச்சீரில் நிரையசையாய் வருஞ்சீர்கள் 123, 132
கடைஞர் - உழவர் 211
கடை மடக்கு 259
கட்டழித்தல் - உறுதி கெடச் செய்தல் 219
கட்டுரைகொள்வார் - சொற்களைக் கேட்பவர் 158
கட்டுரைப்போலி - உரைநடைப் போலி 131
கட்படாம் - முகப்போர்வை 171
கணை அம்பு 227
கண் கட்டு 70
கண்ட எருது 74
கண்டம் - கழுத்து 6
கண்ணஞ்சாது - கண்ணிற்கு அஞ்சாது (நின்று) 171
கண்ணன் 42
கண்ணி - ஆய்ந்து 26
கண்ணோட்டம் - கடைக்கண் பார்வை, நாகரிகம் 144
கண்படை நிலை 18
கதக்கண்ணன் - ஓரரசன் போலும் 146
கதிர் - கிரணங்கள் 125
கதுப்பு - மயிர் 159
கத்தியம் - உரைநடை 121
கந்தம் 65
கந்தாரம் - ஓரிராங்கம் 186
கபிலபரணர் 55
கமகன் 280
கமழ்கண்ணி-மணம் வீசும் மாலை,(கண்ணி-தலையில் சூடும் மாலை) 159
கம்மாட்கு 64
கயத்த - குலத்திலுள்ள (குறிப்புப் பெயரெச்சம்) 184
கயவர் - கீழ்மக்கள் 135
கயில் - ஆபரணத்தின் கடைப்பூட்டு 150
காணக்காரகம் - தொழில் செய்வதற்குக் கருவியாயிருப்பது 40
கரண பேதம் 120
கரந்திட்டார் - மறைந்திட்டார் 190
கரந்துறை பாட்டு 278
கரந்தை 89
கரந்தையின் வகை - கரந்தையாவது பகைவர் கவர்ந்த நிரைகளைக் கவர்தல் 109
கரப்பிய சொல் 206
கரம் - கை, கிரணம் 235
கரவு 69
கரன் மதுகரம் - ஒளியை வண்டு 186
கரியவள் 63
கரியன் 63
கருங்காக்கை 59
கருங்குழலி - கருமையாகிய கூந்தலை யுடையவள் 223
கருங்கோல் - கரிய கொம்புகள் 137
கருஞ்சிலைபோல் - மேன்மையாகிய வில்லைப் போல 185
கருடன் 140
கருணைத்தடைமொழி 242, 243
கருதுவான் 69
கருத்தாக் கருமம் 41, 44
கருத்தாக்காரகம் - தொழில் செய்பவன், செய்பவள் முதலியன கருத்து 40, 90, 104
கருத்து 90, 104
கருத்துவமை 220, 221
கருநிலஞ் சுற்றின தேசம் 86
கருமக் கருத்தா 41, 42
கருமக் காரகம் - தொழில் செய்யப்படுவது 40
கருமதாரயன் 49
கருமத்தை நீங்காத தாது - செயப்படு பொருள் குன்றா வினைப்பகுதி 68
கருமன் 63
கருமி 63
கரைமலி - வரையறைமிக்க 198
கர்ப்ப முகத்தின் பேதம் பன்னிரண்டு 121
கர்ப்பமுகம் 120
கலங்கழாஅலின்-உண்கலங்களைக் கழுவுதலால் (துறை கலக்குற்றன என்க) 154
கலப்பாதாரம் 41, 45
கலவி நிலை 118
கலித்தாழிசை 163, 164
கலித்துறை 163, 164
கலி விருத்தம் 163, 164, 171
கலை 64, 69
கலையார் மனைவி 112
கல் அதர் - மலை வழி 161
கவிகள் நால்வகையர் 280
கவி பாட்டுண்டான் கொள்ளினல்லது பயன்படாதென்பது 200
கவிழ்தும்பை - கவிழப் பூக்குந்தும்பை 58
கவுடரென்னும் புலவர் 202
கவைஞர் - தேவையையுடையவர் 205
கவைய - மூடிய 150
கழஞ்சு - பன்னிரண்டு பலம் எடை கொண்ட நிறை 50
கழல் - வீரகண்டை 32
கழி 70
கழிநெடிலடி - ஐஞ்சீரின் மிக்க சீரையுடைய அடி 124
கழுத்திலாடை 59
களங்கனி 172
களபம் - சாந்து 211
களர் - களர்நிலம் (உவர்ப்பு நிலம்) 170
களவழி நாற்பது 52
களவழி நிலை 118
களவு 92
களிறு - ஆண்யானை 232
களிற்றின் தொலையார்மலைவு 116
கள்ளம் 61
கள்ளன் 61
கள்ளிச்சி 64
கறுவல் 69
கற்பு 69, 92
கற்றலை-கல்லுத் தலையின் கண் உடைய மீன் 52, 58
கனலும் - வெப்பத்தைச் செய்யும் 250
கன்னி 183
கன்னிகாரம் - கோங்கு 186