| 40. உவந்தவை 
 காட்டல் | 
  
 | இதன்கண்: திருநீர்ப் 
 பொய்கை விழாவின்கண் நகர மாக்கள் தாந்தாம் விரும்பிக் காணும் காட்சிகளைத் தம் 
 உறவினர்க்கும் நண்பரக்குங் காட்டி மகிழ்தலும் பிறவுங் கூறப்படும். | 
 
 |  | 
 
 | 
 
 
 
 | புரிந்த 
 சுற்றமொடு புணர்ந்துடன் 
 கெழீஇ விரிநீர்ப் பொய்கையுள் விளையாட்டு 
 விரும்பிய
 மறுநீங்கு சிறப்பின் மதிலும் 
 சேனை
 நறுநீர் விழவின் நாளணி கூறுவென்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 5 
 
 
 
 10
 
 
 
 
 15
 | பனையும் வெதிரும் 
 பாசிலைக் கமுகும் இனையன பிறவும் புனைவனர் 
 நாட்டிக்
 கிடையும் பீலியும் இடைவரித்து 
 அழுத்தி
 மிடைவெண் துகிலின் இடைநிலங் 
 கோலி
 அரிச்சா லேகமுங் மார 
 வள்ளியும்
 கதிர்ச்சா லேகமுங் கந்துங் 
 கதிர்ப்ப
 வம்பப் படத்துப் பொன்னுருக் 
 கூட்டி
 அள்ளிலை வாழை அகம்போழ்ந் 
 திறுத்த
 வெள்ளி வெண்திரள் வேண்டிடத்து 
 ஊன்றிக்
 கட்டளை நாசியொடு கபோதங் 
 காட்டி
 எட்டிறை எய்திய இலக்கணக் 
 காட்சி
 ஏரணி யமைந்த எழுநில 
 நல்வினை
 நீரணி மாடத்து நிலாநெடு முற்றத்து
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 20
 
 | அரிப்பொன் கிண்கிணி ஆர்ப்ப 
 இயலிக்கருங்கண் மகளிர் கைபுடைத் 
 தோப்ப
 இருங்கண் 
 விசும்பகம் இறகுறப் 
 பரப்பிக்
 கருங்கயல் கொண்ட கவுள 
 வாகிப்
 பொங்கிரும் புன்னைப் பூம்பொழில் 
 முன்னிச்
 செங்கால் நாரை செல்வன காண்மின்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 25
 
 
 
 
 30
 
 
 
 
 35
 | சாந்தரை...........யன கூலப் 
 பெருங்கடைஈண்டிய மாதரை ஈண்டிடந் 
 தம்மினெம்
 பூங்குழை மாதர் புனலகம் 
 புக்கனள்
 ஆங்கியன் றவளைத் தாங்குநர் 
 இல்லெனக்
 கூந்தல் நறுமண் சாந்தொடு 
 கொண்டு
 நானச் செப்பொடு கூன்பின் 
 றுளங்கப்
 பெருங்கோ நங்கை பெட்ப 
 ஏறிய
 இருங்கை இளம்பிடி கடச்செருக்கு 
 எய்திக்
 கடிற்றுப் பாகன் கைப்புழிச் 
 செல்லாது
 தொடிக்கை மகளிர் நீர்குடை 
 வெரீஇய
 நெட்டிரும் பொய்கைக் குட்ட மண்டி
 ஒளிச்செந் தாமரைப் பாசடைப் 
 பரப்பில்
 களிக்கயல் இரியக் குளிப்பது காண்மின்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 
 40
 | ஞாழற் படுசினை தோழியர் 
 நூக்கஆம்பல் பரப்பில் பாய்ந்த 
 பைந்தொடி
 செண்ணச் சிகழிகைப் பின்னிடை சேர்ந்த
 பொன்னரி மாலைதன் புறம்பிடைப் 
 புடைப்பச்
 செற்றப் புதவு குத்தி 
 வாங்கிக்
 கொழுநன் கூந்தல் கொண்டெனக் 
 கருதிக்
 கருநீர் உண்கண் கடையில் 
 நோக்கி
 அன்மையின் அழுங்கிய நன்நுதல் உவப்ப
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 45 
 
 
 
 50
 
 |  வள்ளிலைப் 
 பரப்பின் வள்பெறிந் 
 தன்னதுள்ளியல் வட்டிகை துடிப்பிற் 
 கடைஇ
 உள்வழி யுணராது உழிதருங் 
 கணவன்
 நனிபெருங் காதலொடு நண்ணுவழி 
 அடையப்
 பனிவார் உண்கண் பைதல் மறைய
 முகிழ்ந்துவீங்கு இளமுலை முத்திடை 
 நாற்றிக்
 கவிழ்ந்தெருத்து இறைஞ்சுமோர் காரிகை காண்மின்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 
 55
 
 
 
 
 60
 | நீலக்குவளை நிரையிதழ் 
 உடுத்தகோலப் பாசடைப் பால்சொரிந்து 
 அன்ன
 தூவெள் அருஞ்சிறைச் சேவலொடு 
 உளரிப்
 பள்ளி 
 யன்னம் பகலில் துயிலா
 வெள்வளை மகளிர் முள்குவநர் 
 குடையும்
 நீரொலி மயக்கிய ஊர்மலி 
 பெருந்துறைக்
 கடல்திரைக் கண்டங் கானற் 
 குத்தி
 மடல்பனை ஊசலொடு மாடம் 
 ஓங்கிய
 உருவ 
 வெண்மணல் பெருவெண் 
 கோயிலுள்
 செம்பொன் கிண்கிணிச் சேனா பதிமகள்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 
 65
 
 
 
 
 70
 
 
 
 
 75
 | கம்பல் சுற்றமொடு கன்னியர் 
 காப்பப்பைந்தொடிக் கோமாள் நங்கையர் 
 நடுவண்
 வண்டுளர் ஐம்பால் வாசவ தத்தை
 அரைச மங்கையர் ஆயமொடு 
 கெழீஇ
 நிரைவெண் மாடத்து நீரணி 
 காணிய
 போதரும் என்னுங் காதலின் 
 விரும்பிப்
 பெருங்காற் பன்னக் கருங்கோட் 
 டணைத்த
 நாவாய் பண்ணு மாவிறல் 
 மள்ளர்க்குக்
 கள்ளடு மகடூஉக் கைசோர்ந்து 
 இட்ட
 வெள்ளி வள்ளம் பல்லுறக் 
 கவ்விக்
 கூடக் கூம்பின் நீள்திரள் 
 ஏறி
 உச்சிக்கு இவருங் கட்கின் 
 கடுவன்
 வீழ்ந்த திங்களை விசும்புகொண் 
 டேறும்
 தெய்வ 
 மகாஅர் இனையுறத் 
 தோன்றித்
 துள்ளுபு திரிதருந் தோற்றங் காண்மின்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 
 80
 
 
 
 
 85
 
 
 
 
 90
 | சுழலுங் கண்ணினன் சோர்தரு 
 மாலையன்அழல்நறுந் தேறல் ஆர 
 மாந்திக்
 காழகம் மீக்கொண் டாழுந் தானையன்
 வாழ்க வாழ்கவெம் மதிலுஞ் 
 சேனை
 மட்டுண் மகளிர் சுற்றமொடு 
 பொலிகெனத்
 துட்டக் கிளவி பெட்டவை 
 பயிற்றிக்
 கள்பகர் மகடூஉக் கள்குடை 
 ஓசையும்
 கன்னமர் பள்ளிக் கம்மியர் இடிக்கும்
 பன்மலர்க் காவின் அம்மனை 
 வள்ளையும்
 குழலும் யாழும் மழலை 
 முழவமும்
 முட்டின்று இயம்பும் பட்டினம் 
 ஒரீஇத்
 துறக்கம் கூடினும் துறந்துஇவண் 
 நீங்கும்
 பிறப்போ வேண்டேன் யானெனக் 
 கூறி
 ஆர்த்த 
 வாயன் ஊர்க்களி மூர்க்கன்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 
 
 95
 | செவ்வழிக் கீதஞ் சிதையப் 
 பாடிஅவ்வழி வருமோர் அந்த 
 ணாளனைச்
 செல்லல் ஆணை நில்லிவண் 
 நீயென
 எய்தச் சென்று வைதுஅவண் 
 விலக்கி
 வழுத்தினேம் உண்ணும்இவ் வடிநறுந் 
 தேறலைப்
 பழித்துக் கூறும்நின் பார்ப்பனக் 
 கணமது
 சொல்லா ஆயிற் புல்லுவென் 
 யானெனக்
 கையலைத்து ஓடுமோர் களிமகன் காண்மின்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 100
 
 
 
 
 105
 | பல்காசு 
 நிரைஇய வல்குல் வெண்துகில்ஈரத் தானை நீரிடைச் 
 சோரத்
 தோட்டார் திருநுதல் சூட்டயல் 
 சுடரும்
 சுட்டி சிதையக் குட்டத்துக் 
 குளித்து
 மகர குண்டல மறிந்துவில் 
 வீசக்
 கிளரும் பாசிழைக் கிண்கிணிக் 
 கணைக்கால்
 அஞ்செஞ் 
 சீறடி அஞ்சுவர ஓடி
 நிரைவளை மகளிர் நீர்குடை 
 வொரீஇப்
 புரைபூங் கொண்டையிற் புகைப்பன காண்மின்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 110
 
 
 
 
 115
 
 
 
 
 120
 | கருங்கால் புன்னையொடு 
	இருங்கரும் புடுத்து நாணல் கவைஇய கானல் ஒருசிறை
 மகிழ்பூ மாலையொடு மருதிணர் மிடைந்த
 அவிழ்பூங் கோதையோடு அவிர்இழை பொங்க
 எக்கர்த் தாழை நீர்த்துறைத் தாழ்ந்த
 நெடுவீழ் ஊசல் முடிபிணி ஏறித்
 தொடுவேன் முற்றத்துத் தோழியோடு 
	ஆடாப்
 பட்டியல் கண்டத்துப் 
	பலர்மனம் கவற்றஓர்
 எட்டி குமரன் இனிதின் இயக்கும்
 இன்ஒலி வீணைப் பண்ஒலி வெரீஇ
 வஞ்சிக் கொம்பர்த் துஞ்சரித் துளரி
 ஒளிமயிர்க் கலாபம் பரப்பி யிவ்வோர்
 களிமயில் கணம்கொண்டு ஆடுவன காண்மின்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 
 
 125
 
 
 
 
 130
 | அதிரல் பரந்த வசோகந் 
 தண்பொழில்மணிக்கயத்து இயன்றல் மறுவித் 
 நிண்ணிழல்
 பனிப்பூங் குவளையொடு பாதிரி 
 விரைஇ
 வேதிகை யெறிந்த வெண்மணல் திண்ணைப்
 பாலிகைத் தாழியொடு பல்குடம் 
 இரீஇ
 முந்தீர்ப் பந்தர் முன்கடை 
 நாட்டி
 வரைவின் மாந்தர்க்குப் புரைபதம் 
 பகரும்
 கலம்பூச் சரவத்து இலஞ்சி 
 முற்றத்துக்
 கருப்புக் கட்டியொடு தருப்பணங் 
 கூட்டி
 நெய்ச்சூட்டு இயன்ற சிறுபல் 
 உண்டி
 நகைப்பதம் மிகுத்த கையர் 
 ஆகித்
 தொகைக்கணம் போதரும் அறச்சோற்று அட்டில்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 135
 
 | தளைஉலை வெந்த வளைவால் 
 அரிசிவண்ணப் புழுக்கல் உண்ணாது சிதறி
 ஊட்டெமக்கு ஈத்த கோப்பெருந் 
 தேவி
 முன்ன ராக முன்னுமின் 
 கொண்டுஎனத்
 தலைப்பெரு மடையனைத் தலைக்கடை 
 வாங்கும்
 எந்தயிர் வாரான் எமக்கெனச் 
 சீறி
 அந்த ணாளர் அலைப்பது காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 140 
 
 
 
 145
 |  முன்துறை ஈண்டிய குன்ற 
 வெண்மணல்எக்கர் 
 மீமிசைத் தொக்கொருங்கு 
 ஈண்டி
 நுண்அயிர் 
 வெண்துகள் குடங்கையின் 
 வாரி
 இலைப்பூண் கவைஇய எழுதுகொடி 
 ஆகத்து
 முலைக்கச்சு இளமுலை முகத்துஇலை 
 அப்பி
 மராஅ மயிலின் 
 மயங்குபு தூங்கும்
 குழாஅ மகளிர் குரவை காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 
 150
 | புனைந்தேந்து அல்குல் காசுபுதை 
 யாதுநனைந்து நிறங்கரந்த நார்நூல் 
 வெண்துகில்
 அரையது ஆகவும் ஆடைகா ணாது
 நிரைவளை முன்கைத் தோழியர் 
 குடைந்த
 நூரைக்கை அரிக்குமோர் நுடங்கிடை காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 
 155
 | தொக்கனர் படியும் தொய்யில் 
 மகளிர்தம்கைக்கொள் 
 நீரில் கண்நிழல் 
 கயல்என
 மெய்க்கண் 
 மேவார் மெல்லெனச் சொரிதந்து
 எக்கர்க் கிளைக்கும் ஏழையர்க் காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 
 
 160
 | நெடுநீர் மாடத்து ஏணி 
 ஏறிப்பொறிமயில் 
 பெடையின் பொங்குபு 
 பாய்தலில்
 அணிக்கையில் தவழ்ந்த மணிக்குரல் 
 ஐம்பால்
 ஈர்முத்து ஆகத்து ஈரம் 
 புலர்த்தி
 அழல்நறுந் 
 தேறல் சுழல்வண்டு 
 ஓப்பிக்
 குறிவெங் காதலன் பொறியாப்பு 
 உறுத்த
 தமனிய வள்ளத்துத் தன்நிழல் 
 நோக்கிப்
 பிறள்முகம் இதுவெனப் பெண்மையின் மயங்கிக்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 165
 
 
 
 
 170
 | கள்ளினுள் தோன்றும்இவ் ஒள்ளிழை 
 மாதரைப்பண்டும் ஒருகால் கண்டுஅகத்து 
 அடக்கிய
 வையப் பரத்தையைக் கையொடு 
 கண்டேம்
 இனிப்பொய் உண்ணும் ஏழையம் 
 அல்லம்என்று
 அணித்தகு நுதல்வியர்த்து அரையெழுத்து 
 அளைஇத்
 துனிப்புறு கிளவி பனிக்கடல் 
 பிறந்த
 அரும்பெறல் 
 அமிழ்தென விரும்பும் 
 வேட்கையன்
 முகிழ்நகை முகத்தன் ஆகி முற்றிழை
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 
 175
 
 
 
 
 180
 | அவிழ்குரல் கூந்தல் அங்கை 
 யடைச்சிக்கள்ளமர் தேவிநின் கதிர்விடு 
 நெடுமுகத்து
 ஒள்அணி காணிய உள்ளி 
 வந்ததை
 உணராது 
 புலத்தல் புணர்குவை 
 ஆயின்என்
 உள்ளகம் சுடுமென உள்அவிழ்ந்து 
 எழுதரும்
 காமக் கட்டுரை கனியென 
 வளைஇத்
 தாமக் கோதையொடு தாழ்சிகை 
 திருத்தி
 வளர்ந்தேந்து இளமுலை மருங்கிவர்ந்து 
 கிடந்த
 பொலங்கலம் மணிப்பூண் பொலியப் 
 புல்லிஅவள்
 மனங்கொளத் தேற்றும்ஓர் மைந்தனைக் காண்மின்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 
 185
 | ஏமம் 
 முந்நீர் ரெறிசுற 
 உயர்த்தகாமனும் விழையும் காமர் 
 காரிகைக்
 கலைஉணர் மகளிர் உள்ளம் போல
 நிலையின்று உழிதரும் நெடுஞ்சுழி 
 நீத்தத்து
 வினைதீர் உயிரின் மிதந்தது 
 கீழாப்
 பண்ணமை நெடும்புணை திண்ணிதின் 
 தழீஇ
 ஆய மாக்களொடு சேய்வழி 
 ஓடிக்
 கலந்து காதலின் ஆடலின் கைசோர்ந்து
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 190 
 
 
 
 195
 
 
 
 
 200
 |  மலர்ந்துகடை 
 போழ்ந்து மாழை 
 கழீஇக்காமம் கனிந்த கருந்தடம் 
 கண்ணின்
 இமைதீர் வெம்பனி முலைமுகம் 
 நனைப்ப
 மாரிப் பிடிக்கை நால்புறல் 
 கடுப்ப
 நீர்பொறை ஆற்றாது நெகிழ்ந்துவீழ் 
 இசைந்த
 காரிரும் 
 கூந்தல் கையின் 
 ஏந்தி
 அகலின் அகலும் உயிரினள் 
 ஆகித்
 தலைநீர்ப் பெருந்துறை நிலைநீர் 
 நின்ற
 வண்டார் கோதையைக் கண்டனன் 
 ஆகி
 நீள்நீர் நீந்தி நெடும்புணைள் 
 ஒழியத்
 தன்வயின் 
 செல்லும் இல்வளக் கொழுநனை
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 
 
 205
 | நின்வயின் காதல் நில்லா 
 ஊர்தரும்பூம்புனல் மடந்தையைப் புணர்ந்துவிளை 
 யாடித்
 தேம்பட மொழிந்து வேம்புமனத்து 
 அடக்கி
 வார 
 லோஎன வாய்திறந்து 
 மிழற்றி
 ஓராது 
 புலக்கும்ஓர் ஒள்ளிழை காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 
 
 210
 
 
 
 
 215
 | நச்சுமன வேந்தர்க்குத் துச்சில் 
 அமைத்தசிறுவலி ஒருவனின் தன்மனம் 
 சுருங்கி
 நறுமெல் 
 ஆகம் நந்துபொறை 
 எள்கப்
 போக்கிடம் இன்றி வீக்கமொடு 
 பெருகி
 அம்மையும் அழகும் 
 கொம்மையொடு 
 கழுமிக்
 கால்பரந்து இருந்த கருங்கண் 
 வெம்முலை
 மேலிருந் தன,யான் பொறையாற் 
 றேன்என்று
 ஒசிவது போலும்நின்நு சிசுப்பு 
 உணராது
 இனக்கிடை இப்புனல் குடைகுவை 
 யாயின்
 நினக்கிடை 
 மற்றொன்று உடையை 
 யோவெனக்
 காதற் செவிலி கழறுபு விலக்கவும்
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 
 220
 
 
 
 
 225
 
 
 
 
 230
 | போதற் கண்ணே புரிந்த 
 வேட்கையின்ஐயரி பரந்த அரிமலர் 
 நெடுங்கண்
 மையுண்டு மதர்த்த மணிஒழுக்கு 
 ஏய்ப்பக்
 கோல 
 ஆகத்துக் கொடிபட 
 எழுதிய
 சாதிங் குலிகம் ஆதி 
 யாகச்
 சுட்டிச் சுண்ணமொடு மட்டித்துக் 
 கலந்த
 குங்குமக் கொழுஞ்சேறு கூடக் 
 குழைத்திட்டு
 இந்திர வில்நெகிழ்ந்து உருகி யாங்கு
 நீடுர வழியின் ஊடுநிமிர்ந்து 
 ஒழுகிப்
 பிணர்முரிப் பட்டுடைப் பெருநல 
 அல்குல்
 காசுநிழல் காட்டும் சின் 
 மாமை
 ஆவி நுண்டுகி லணிநல 
 நனைப்பப்
 பூவினுள் பிறந்த புனைஇழை போலத்
 தண்ணீர் தோழியர் ஆடத் 
 தான்தன்
 கண்ணீர் ஆடுமோர் கனங்குழை காண்மின்
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 
 235
 
 
 
 
 240
 | திருவீற்று இருந்த திருநகர் 
 வரைப்பின்உருமீக் கூறும் மன்னவன் 
 ஒருமகள்
 கண்டுகண் ஓராக் காமர் காரிகை
 வண்டுஉளர் ஐம்பால் வாசவ 
 தத்தை
 போணி ஆடும் பெரும்புனல் 
 விழவினுள்
 நாணிச் செல்லா நல்குரவு 
 உடையோர்க்கு
 அரும்பொறி அணிகல மாரப் 
 பெய்த
 பெரும்பொறிப் பேழை யிவையெனக் கூறிக்
 கறைவாந் முரசங் கண்ணதிரிந் 
 தியம்ப
 அறையவுங் கொள்ளுங் குறையில 
 ராகித்
 துறைதுறை தோறும் இறைகொண் 
 டோருள்
 அணியா தோரை ஆராய்ந்து 
 உழிதரும்
 பணியா வேந்தன் பணிநரைக் காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 245 
 
 
 
 250
 
 
 
 
 255
 |  புழல்கால் றாமரை 
 அழல்போது அங்கண்அல்லி மெல்லணைப் பள்ளி 
 கொண்ட
 தார்ப்பூம் பேடை தையலர் 
 எடுத்த
 நீர்ப்போர்க் கவ்வையின் நீங்கி 
 முனாஅது
 ஒள்ளொளிப் பவளத்து உள்ளொளி 
 அடக்கி
 வெள்ளிப் 
 பூந்தார் எள்ளும் 
 தோற்றத்துப்
 போதுபொறை ஆற்றாப் புன்னைஅம் 
 பொதும்பர்த்
 தாதுபுறத்து உறைப்பத் தங்கலின் 
 தலைபரிந்து
 இகழ்வின் நோக்கமொடு இரைவேட்டு 
 எழுந்த
 பவழச் செங்கால் பால்நிறச் 
 சேவல்
 திரைஉமிழ் 
 பொய்கையுள் இரைஉமிழ்ந்து மயங்கி
 | 
 உரை 
  | 
 |  | 
 
 | 
 
 
 260
 | மதிபுரை தாமரைப் பொதிபோது 
 புல்லிஅஃதுஅன்மையின் அழிந்து புன்மையின் 
 புலம்பி
 அருப்பிள முலையவர் அடைகரை 
 வைத்த
 மருப்பியல் 
 செப்பை மதித்த தாகி
 அழல்வெங் காமத்து அன்புதலைக் 
 கொண்ட
 மழலைத் தீங்குரல் மருட்டி 
 அழைஇக்
 குறுகச் 
 சென்றுஅதன் உறுநோக்குப் 
 பெறாது
 புன்னையம் பள்ளிப் பொழில்தொறும் 
 நாடும்
 அன்னப் புள்ளின் அலமரல் காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 265 
 
 
 
 270
 
 
 
 
 275
 |  நானம் தோய்த்த நறுமென் 
 கூந்தலுள்ஆன்ஐந்து தெளித்து நீரிடை 
 மூழ்கி
 ஆவிரை அலரு அறுகையும் 
 செரீஇக்
 கொட்டுமடி விரித்த பட்டுஉடைத் 
 தானையள்
 அங்கோல் தீந்தொடைச் செங்கோட்டு யாழின்
 பத்தர் அன்ன மெத்தென் 
 அவ்வயிற்றுத்
 திரையொடு பட்டு நுரையொடு 
 மறுகி
 மட்டுஊண் மறுத்த பட்டினிப் 
 படிவமொடு
 கட்டளை பிழையாப் பட்டுடை 
 அல்குலள்
 பெட்ட வாய்மொழிப் பெரும்பாகு 
 உதிர
 எதிர்ப்புனல் 
 ஆடுநர்க்கு ஏமம் 
 ஆகப்
 புனல்துறை விடுத்த பொங்குமடைப் புழுக்கலைக்
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 
 280
 
 
 
 
 285
 | காக்கை 
 ஓட்டி நோக்கின் 
 உண்டுவேண்டலன் ஆயினும் விறலும் 
 சேனையும்
 நீண்ட இஞ்சியும் நிறைமணி 
 மாடமும்
 உருக்குறு 
 நறுநெய் உள்ளுறப் 
 பெய்த
 புழுக்கலொடு பால்சோறு ஆயின 
 வாயின்
 வழுக்கல் இன்றிஎன் வயிற்றகம் 
 ஆர
 உண்பல் என்றுதன் கண்பனி 
 வாரக்
 கொள்ளா வயிற்றின் ஆண்ட கையன்
 செல்வோன் கண்டு பொள்ளென நக்கு
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 
 
 290
 | நுரைபுரை வெண்துகில் அரைமிசை 
 வீக்கிஅவிஇடப் படின் ஆருயிர் 
 வைப்பது
 கடிவோ 
 ரில்லை முடிகுவெ 
 னின்றெனச்
 செவிமடுத் தெற்றிச் சிவந்த 
 கண்ணினன்
 உண்டற் 
 புண்ணிய முடைஎனை 
 ஒளித்துக்
 கொண்டனை போகின் கூடுமோ 
 நினக்குஎனப்
 பிண்டம் பெருங்கவுள் பெருவியர் 
 இழிதரக்
 கண்டோர் ஆர்ப்பக் கலாஅங் 
 காமுறூஉம்
 பண்டப் பார்ப்பான் பட்டிமை காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 290 
 
 
 
 300
 
 
 
 
 305
 
 
 
 
 310
 |  நுரையொடு பொங்கும் 
 நுண்நூல் வெண்துகில்அரைஇடை நெகிழ அசைத்தல் 
 செல்லார்
 இறும்என நுடங்கும் சிறுகொடி 
 மருங்கில்
 மதுகை ஓரா மறங்கூர் 
 மனத்தர்
 எதிர்நீர் தூஉம் இளையோர் 
 திருமுகத்து
 ஆழ மிகவா 
 அரிபரந்து 
 அகன்ற
 மாழை உண்கண் மலரென 
 மதித்துத்
 தண்செம் கழுநீர் தகைமலர்த் 
 தாதும்
 ஒண்செந் தாமரைப் பைம்பொன் 
 தாதும்
 ஆராய்ந்து உழிதரும் அஞ்சிறை 
 வண்டினம்
 ஓராங்கு 
 நிலைபெற்று உள்நெகிழ்ந்து 
 அவிழ்ந்த
 பேரா இவையெனப் பேர்தல் 
 செல்லா
 மொய்த்தலின் மற்றவை மொய்ப்பின் 
 நீங்கத்
 தத்துஅரி நெடுங்கண் தகைவிரல் 
 புதைஇப்
 புதுமண மகளிரின் கதுமெனத் தோன்றும்
 மதுர மழலை மடவோர்க் காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 
 
 315
 
 
 
 
 320
 | நிறைக்குறின் நிறைத்துப் போக்குறின் 
 போக்கும்பொறிப்படை அமைந்த பொங்கில 
 வந்திகை
 முன்னம் புக்க தன்அமர் 
 காதலன்
 பாடகச் சீறடிப் பைந்தொடி மாதரை
 ஆடுக வாவிதன் அகவயின் 
 என்றலின்
 செஞ்சூட்டு இட்டிகைச் சுதைச்சுவர்ப் 
 படுகால்
 அஞ்சிறை அன்னத்தின் அணிபெற 
 இயலி
 மண்ணுமணி அன்ன ஒள்நிறத் 
 தெள்நீர்த்
 தண்நிழல் கண்டே என்நிழல் என்னும்
 நுண்மதி நுணுகாப் பெண்மதி பெருக
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 
 
 325
 
 
 
 
 330
 | எழுதி 
 அன்ன ஏந்துநுண் 
 புருவம்முழுதும்நுதல் நெருங்க முரிய 
 ஏற்றிச்
 செதும்பல் தாமரைச் செவ்விதழ் 
 போலப்
 பதம்பார்த்து மலரும் பனிமலர்த் 
 தடம்கண்
 கைஇகந்து 
 சிவப்ப வெய்துபட 
 உயிரா
 நிரைகொள் அன்புத்தளை நெரிய 
 ஊர்தரும்
 புலவி நோக்கத்துப் பூந்தொடி 
 புலம்பி
 நீர்அர மகளிரொடு நிரந்துடன் 
 நின்ற
 சூரன் இவனெனச் சொல்லுங் 
 குறிப்பினள்
 பேரும் 
 உள்ளமொடு பிறக்குஅடி இடுதலின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 
 
 335
 
 
 
 
 340
 | நண்ணிய காதலி கண்ணியது 
 உணர்ந்துகாளை போந்துஅவள் சிறுபுறம் 
 கவைஇப்
 பூளை மெல்அணைப் பொதிஅவிழ்ந்து 
 அன்ன
 மென்தோள் நெகிழப் பற்றிக் 
 குன்றா
 அழல்புரை 
 வேகத்துள் அன்புநீ 
 ராட்டிச்
 சிறுவரைத் தணித்துஅவள் திருமுகம் 
 திருத்தி
 நீர்அர மடந்தையும் கணவனும் 
 இதனுள்
 ஆர்வ உள்ளமொடு ஆனோர்க் 
 காண்அகம்
 ஏகென உய்த்துத்தம் இருநலங் காட்டி
 வேக ஊடல் லவள்வயின் 
 நீக்கி
 உருவக் கோலமொடு ஓம்பல் 
 செல்லாது
 ஒருவயின் ஆடும் இருவரைக் காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 345
 
 
 
 
 350
 | ஒரு 
 மீக் கொற்றவன் உடைப்பொருள் 
 உடையசெருவார் சேனைப் பெருவா 
 ணிகன்மகள்
 தன்னொடு நவிலத் தன்ஐ 
 மார்கள்
 கலத்தில் தந்த நலத்தகு 
 விழுச்சீர்
 வேறுபடு திருவினுள் விளங்கிழை 
 மகளிரைக்
 கூறுபட நிறீஇக் குளித்தனள் 
 எழுவோள்
 மின்னிருங் கூந்தல் மேதகப் 
 புனைந்த
 பொன்அரி 
 மாலையைப் புனல்கொண்டு 
 ஈர்ப்ப
 அத்துறை மருங்கின் அயற்துறை 
 ஆடும்
 மைத்துன மன்னன் கைப்படுத்து 
 வந்துதன்
 சென்னி சேர்த்துஅவள் முன்னர்த் 
 தோன்ற
 நெடும்புணை தழீஇ நீத்தொடு மறலத்
 | உரை 
  | 
 |  | 
 
 | 355 
 
 
 
 360
 
 
 
 
 365
 |  தடம்பெரும் கண்ணி 
 தலைகவிழ்த்து 
 இறைஞ்சிச்செறிப்பின் ஆகிய செய்கையின் 
 ஒரீஇயவள்
 குறிப்பில் கொண்டனன் கோதை 
 என்பது
 அயலோர் கருதின் அற்றம் 
 தரும்எனக்
 கயலேர் நெடுங்கண் கடும்பனி கால
 மாலை கவர்ந்து மற்றவற்கு 
 ஈத்தனை
 கோல வைவேல் ஏனைய 
 குமரர்க்கு
 அறியக் கூறுவென் அஞ்சுவை 
 ஆயின்
 பெயர்த்துத் தம்மெனச் செயிர்த்தவள் 
 நோக்கி
 நீரணி ஆட்டொடு நெஞ்சுநொந்து 
 உரைக்கும்
 வாணிக மகளின் மடத்தகை காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 
 
 
 370
 | மின்அவிர் மணிப்பூண் மன்னவன் 
 மடமகள்அம்கலுழ் பணைத்தோளன் செங்கடை 
 மழைக்கண்
 நங்கை யாடும் பொங்குபுனல் 
 பூந்துறைக்
 குங்குமக் குழங்கல் கொழும்களி ஆக
 இத்துறை மேவ எத்துறை 
 ஆயினும்
 ஆடல்மின் யாவிரும் ஆடுவிர் 
 உளிர்எனின்
 ஆடகப் பொன்னினும் மளவின் 
 இயன்ற
 பாவை ஆகும் படுமுறை 
 அதுஎம்
 கோவின் ஆணை போமின் நீவிர்எனத்
 | உரை 
  | 
 |  | 
 
 | 375 
 
 
 
 380
 |  தென்மலைப் பிறந்த 
 பொன்மருள் சூரல்கருங்கண் தோறும் பசும்பொன் 
 ஏற்றித்
 தொடித்தலைப் படுகோல் பிடித்த 
 கையர்
 வரிக்குப் பாயத்து வார்பொன் 
 கச்சையர்
 திருப்புனல் ஆடிச் செயிர்த்த 
 நோக்கினர்
 முழுநீர் 
 விழவின் மூஎழு 
 நாளும்
 கழுநீர்ப் பெருந்துறைக் காவல் 
 நண்ணிய
 வண்டும் சேரா அஞ்சுவரு 
 சீற்றத்துக்
 குண்டுதுறைக் காவலர் குழாஅங் காண்மின்
 | உரை 
  | 
 |  | 
 
 | 385
 
 
 
 
 390
 | இன்னவை பிறவும் கண்ணொடு புணர்ந்தபுண்ணியம் உடைமையின் காண்மின் 
 நீரெனப்
 பணிவில் நல்வினைப் பயன்உண்டு 
 ஆயின்
 மணிமுடி மன்னன் அணியும் 
 சேனையுள்
 எழுமைப் பிறப்பும் எய்துகம் 
 யாமெனக்
 கழுமிய காதலொடு கைதொழுது ஏத்தி
 நகர மாந்தர் பகர்வரால் பரந்தென்.
 | உரை 
  |