தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொங்கல் விழா

  • பொங்கல் விழா

    தமிழர்கள் பல திருநாள்களைக் கொண்டாடுகிறார்கள். அவற்றுள் முக்கியமானது பொங்கல் திருநாள். இத்திருநாளைத் தைத்திங்கள் முதல்நாளில் கொண்டாடுகிறார்கள்

    தமிழர்கள் பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். முதலாவது நாள் பெரும்பொங்கல். அன்று அனைவரும் புத்தாடை அணிவார்கள். புதிய பானையில் புத்தரிசி இடுவார்கள். அதனைப் பொங்கல் இடுவார்கள். பொங்கல் பொங்கும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். பின்னர் பொங்கலைக் கதிரவனுக்குப் படைப்பார்கள். எல்லோரும் கதிரவனை வழிபடுவார்கள்.


    இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல். அன்று மாடுகளை நன்றாக அலங்கரிப்பார்கள். மூன்றாவது நாள் காணும் பொங்கல். அன்று மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்வார்கள். இந்நாளில் 'மஞ்சு விரட்டு' என்னும் வீரவிளையாட்டு நடைபெறுகிறது. பொங்கல் உழைப்பின் பலனை உணர்த்தும் திருநாள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 18:10:02(இந்திய நேரம்)