தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பேய் ஆட்டம்

 • பேய் ஆட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

   

  நிகழ்ச்சியாக மேடையில் நிகழ்கிறது. இது பேய் பிடித்தவரைப் பூசாரி உடுக்கடித்து விரட்டுவது போன்று அமைவதாகும். தேவராட்டம், ஒயிலாட்டம், கிராமியப்பாடல் நிகழ்ச்சிகள் ஆகியன நிகழும் போது பேயாட்டம் இடை நிகழ்ச்சியாக நிகழும்.

  பேய் பிடித்தவராக ஒரு பெண்ணே நடிக்கிறார். இவரின் ஒப்பனை அச்சப்படும் படியாக இருக்கும். தலை முடியை விரித்து போட்டுக் கொண்டு ஆவேசத்துடன் ஆடுவார். இவரது ஆட்டத்துக்கேற்ப பம்பை இசைக்கருவி இசைக்கப்படும். இந்த நேரத்தில் பூசாரி உடுக்கை அடித்துக் கொண்டு வருவார். பேயை விரட்டும்படி உடுக்கை அடிப்பார். இந்தப் பாட்டும் ஆட்டமும் உக்கிரத்தோடு அமைந்திருக்கும்.

  மேடையில் நிகழும் கலை நிகழ்ச்சியின் தொய்வைப் போக்கும் வகையில் நகைச்சுவையாகப் பேயாட்டம் நிகழ்த்தப்படுகின்றது. இதில் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியுடன் வாழும் போது மனைவிக்குப் பேய் பிடிக்கும். கணவனால் கோடாங்கி அல்லது பூசாரி அழைத்து வரப்படுவார். உடுக்கையின் ஒலியுடனும், அவருக்குத் துணையாகப் பின்பாட்டு பாடுபவருடனும் கோடாங்கி மேடைக்கு வருவார். பெண் பேய் பிடித்தது போல் ஆட, கோடாங்கி உடுக்கடித்துப் பாடுவார். அவர் பாடலுக்குப் பெண் ஒருவர் பின்பாட்டு பாடுவார். பேய் பிடித்ததைப் பற்றி அவர் கேள்வி கேட்பதாகவும் பேய் பிடித்த பெண் அதற்குப் பதில் அளிப்பது போலவும் நிகழ்ச்சி அமையும். அவர்களின் உரையாடல் நகைச்சுவையுடன் அமையும். நகைச்சுவையே இதன் முதன்மை நோக்கமாகும். கிராமப்புறங்களில் பெண்கள் பேய் பிடித்து ஆடுவதை நையாண்டி செய்வதாகவும் பேயாட்ட நிகழ்ச்சி அமையும். கரகாட்ட நிகழ்ச்சிக்கு இடையே கரகாட்டப் பெண் மனைவியாகவும், கோமாளி கணவனாகவும், நையாண்டி மேளக் கலைஞர் பூசாரியாகவும் பங்கு கொண்டு பேயாட்டம் நடத்தப்படுகிறது. இது ‘பேயாட்ட காமிக்’ என்று அழைக்கப்படுகிறது.

  இந்நிகழ்ச்சி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது. காளி, மாடசாமி, கருப்புசாமி கோயில் நிகழ்ச்சிகளிலும் இப்பேயாட்ட கலை நிகழ்த்தப்படுகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 17:29:45(இந்திய நேரம்)