தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கிருட்டிணனாட்டம்

 • கிருட்டிணனாட்டம்

  முனைவர் சி.சுந்தரேசன்
  துறைத்தலைவர்
  நாட்டுப்புறவியல் துறை

  கிருட்டிணனாட்டம், கிருட்டிணன் தெய்வத்தைப் போல் வேடமிட்டு ஆடுவது கிருட்டிணனாட்டம். சமூக விழாக்களிலும் தெய்வ ஊர்வலங்களிலும் இக்கலை நிகழ்கிறது. கண்ணனாட்டம் என்ற உறியடிக் கலையிலிருந்து இது வேறுபட்டது.

  பெரும்பாலும் சிறுவர்களே இக்கலையை நிகழ்த்துகிறார்கள். கிருட்டிணன் வேடம் ஏற்பவர் சட்டை அணிவதில்லை. அதனால் சிறுமிகள் இக்கலையை நிகழ்த்துவதில்லை. தலையில் மயிற்பீலி, இடையில் பட்டாடை, கழுத்தில் மாலை, கையில் மணி அலங்காரப் புல்லாங்குழல், காலில் சலங்கை, நெற்றியில் நீண்ட நாமம் உடல் முழுவதும் நீல நிறம் கொண்ட உடல் அமைப்பு இருக்கும். இது போன்று ஒப்பனை செய்கின்றனர்.

  கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும் கிருட்டிணனாட்டம் இடம் பெறுகிறது. கரகாட்டம் நிகழும் இடத்தில் இடை நிகழ்ச்சியாக கரகாட்டத்துடன் இது நிகழ்கிறது. கரகாட்டத்துக்குரிய நையாண்டி மேளமே இதற்குப் பின்னணியாக உள்ளது. சில கரகாட்டக் குழுக்களில் கிருட்டிணனுடன் கோமகை வேடம் அணிந்த சிறுவர் அல்லது சிறுமிகள் ஆடுவர். கரகாட்டத்துணைக் கலைஞர்களே கிருட்டிண வேடம் புனைகின்றனர். கிருட்டிணனாட்டம் இம்முறையில் நிகழ்த்தப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 17:46:16(இந்திய நேரம்)