தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாகலிங்கம்

  • நாகலிங்கம்

    முனைவர் கு.க.கவிதா,
    உதவிப் பேராசிரியர்,
    சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

    படமெடுத்தாடும் நாகப் பாம்பின் தலை சிவலிங்கம் மேல் இருப்பது போன்ற பூக்களை உடைய மரமாகும். நாகலிங்கம் பெரிய வீடுகளின் முகப்பிலும், கட்டிட வளாகங்களிலும் வளர்ந்து நிழல் தருவதுடன், தூசியை வடிகட்டும், சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும் மரமாகும்.

    தாவரவியல் பெயர் : கவுரவ்பீட்டா கயனென்சிஸ் (Couroupita guianensis Aublet.)
    தாவரக் குடும்பம் : லெஸிதிடேசி (Lecythidaceae)

    நாகலிங்கம்

    நாகலிங்கத்தின் தாயகமான கயனாவில் வழங்கப்படும் பெயரிலிருந்து கவுரவ்பீட்டா என்ற முதற்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இணைப்புப் பெயரான கயானெசிஸ் இதன் தாயகத்தைக் குறிக்கும் பெயராகும்.

    நாகலிங்கப்பூ

    நாகலிங்கம் மரம் 11-12 மீட்டம் உயரம் வளரும். 6 மீட்டர் அளவிற்கு விரிந்த தழையமைப்பு, அடர்த்தியாகவும் இருக்கும். அடிமரத்திலேயே நீண்ட குச்சிகள், மரத்தை ஒட்டினாற்போல் பூக்களைத் தாங்கிக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் காவிரி நதிக்கரையில் அதிகமாகக் காணப்பட்ட நாகலிங்க மரம், குடிபெயர்ந்து நகரங்களில் குடியேறிவிட்டது.

    நடுமரம் மற்றும் தடித்த பெரிய கிளைகளில் பூக்கள் உருவாகும். ஒரு மீட்டர் நீளப் பூக்களைகளில் சிமிழ் போன்ற வடிவில் பூ மொட்டுக்கள் உருவாகும். விரிந்த நிலையில் மகரந்த தண்டுகள் இணைந்த பகுதி, நாகப் பாம்பின் படமெடுத்த தலையைப் போன்றிருக்கும். விரிந்த பகுதியின் கீழ், பூவின் அண்டம், சிவலிங்கத்தைப் போன்று தோற்றமளிக்கும். இதன் காரணமாகவே இம்மரத்திற்கு நாகலிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூக்கள் உதிர்ந்து காய்கள் உருவாகும்.

    பயன்கள் :

    துரிதமாகத் துளிர்க்கும் இலையைக் கொண்டிருப்பதால் தழையை அரக்கி, தழையெருவாகப் பயன்படுத்தலாம். வெட்ட வெட்ட தழைக்கக் கூடியது.

    இனி தீவுகளில் கனியைக் கால்நடை தீவனமாக உபயோகிக்கின்றனர்.

    நீக்ரோ இனத்தவர் கனியை உண்பதாகவும், மேலும் கனியிலிருந்து ஒருவகை பானம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

    மரத்தை வேளாண்மைக் கருவிகள் செய்திட உபயோகிக்கலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:54:10(இந்திய நேரம்)