தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சோற்றுக்கற்றாழை

  • சோற்றுக்கற்றாழை

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Aloe vera L.

    குடும்பம் : Lillaieae

    ஆங்கிலம் : Aloes, Indian aloes

    வளரிடம் : தென் தமிழ்நாட்டில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.

    வளரியல்பு : பல பருவங்கள் வாழக்கூடிய குறுஞ்செடி. இலைகள் தரையினை ஒட்டி சதைப்பற்றுடன் காணப்படும். இதன் விளிம்பில் கீழ் நோக்கிய முட்கள் உண்டு, இளம் பச்சை நிறமும் வெண்மைப் புள்ளிகளும் கொண்டுள்ளன. மலர்கள் நீளமான மஞ்சரி காம்பில் தோன்றும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணங் கொண்டவை.

    மருத்துவப் பயன்கள் : இலைகளில் காணப்படும் ஜெல் (gel) காயங்களைக் குணப்படுத்தும், காயங்களை, தீப்புண் போன்ற கடுமையான புண்களைக் குணப்படுத்தும். அழகுக்கு இச் ஜெல் (gel) பயன்படுகின்றன. வயிற்று வலியினையும், மாதவிடாய் திருந்தும், தலைமுடிக்குக் கருப்பிடவும், முடி வளரவும், வலிப்பு நோயாளிகளுக்கும் மருந்தாகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:26:50(இந்திய நேரம்)