தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கீழாநெல்லி

  • நந்தியாவட்டை

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Ervatamia divaricata (L) Burki.

    குடும்பம் : Appoynaceae

    ஆங்கிலம் : East Indian rosebay

    வளரிடம் : அலங்காரத் தாவரமாகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது; வேலிகளிலும் நிழற்பாங்கான காடுகளிலும் காணப்படுகிறது.

    வளரியல்பு : புதர்ச்செடி; 2-3மீ உயரமுள்ளது. இரு சமபக்க கிளைத்த கிளைகளைக் கொண்டுள்ளது; இலைகள் தடிப்பானவை; பளபளப்பானது; அடிப்புறம் மங்கலான பச்சை நிறமுடைய முட்டை வடிவானது; மலர்கள் வெள்ளை நிறம்; மணமுடையது. அல்லி இதழ் விளிம்பு சுருண்டது; கனிகள் அரிதாகத் தோன்றும் வளைந்தவை; ஆண்டு முழுவதும் மலரும்.

    மருத்துவப் பயன்கள் : இலை பால்சாறு காயங்களின் மீது பூசப்படுவதால் வீக்கம் குறையும், கண் நோய்களிலும் உதவுகிறது. மலர்களின் சாறு எண்ணெய் கலந்து பயன்படுத்தும் பொழுது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும்; கண் நோய் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

    வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது; வேர் கசப்பானது; பல்வலி போக்கும். வலியைப் போக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:30:38(இந்திய நேரம்)