தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அதிவிடயம்

 • அதிவிடயம்

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Aconitum heterophyllum Wall ex Royle.

  குடும்பம் : Ranunculaceae

  ஆங்கிலம் : Indian atees

  வளரிடம் : மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. அழகிய குறுஞ்செடியாகும்.

  வளரியல்பு : செங்குத்தான பல பருவ கவர்ச்சியான குறுஞ்செடி; இலைகள் அகன்றவை, முட்டை வடிவின அல்லது 5 மடிப்புகளும் பற்களும் கொண்டவை. மலர்கள் 2-5 செ.மீ நீளமும் தலைக்கவசம் உருவமும் ஒளிரும் நீல வண்ணமும் கொண்டவை.

  மருத்துவப் பயன்கள் : வேருக்குப் பால் உணர்வு தூண்டும் திறனுள்ளது. ஜீரணம் தூண்டுவி, வலுவேற்றியாகவும் செயல்படுகிறது. தொண்டை நோய்கள், அடிவயிற்றுவலி ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேரைப் பொடி செய்து குழந்தைகளின் இருமல், காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகல், வாந்தி எடுத்தல் ஆகியவற்றினைப் போக்க வல்லது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:27:52(இந்திய நேரம்)