தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

 • வெள்ளறுகு மூலிகை

  - வேதிமக் கூறுகளும் மருத்துவப் பயன்களும்்


  முனைவர் வீ.இளங்கோ,
  உதவிப்பேராசிரியர்,
  சித்த மருத்துவத்துறை


  இந்தியாவின் வெப்ப மண்டலத்தில் தானாக வளரும் பூண்டினத்தைச் சேர்ந்த வெள்ளெறுகு மூலிகை சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுகிறது. குடல் நோய், கீல்வாயு, மற்றும் கழலை நோய்களுக்கு மருந்தாகத் தொன்றுதொட்டுப் பயன்பட்டு வந்தமை அகத்தியர் குனபாடமெனும் சித்த மருத்துவநூல¦ல் குறிப்பிடப்படுகிறது

  மூலிகை வேதிமக் கூறுகள்

  இதன் மெத்தனால் வடிசாற்றில் பிளோனாய்டுகள், அல்காலாய்டுகள் டானின் மற்றும் கிளைக்கோசைடுகள் உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதிவளியேற்றத்தைத் தணிக்கும் வைட்டமின்கள்-A, C மற்றும் E ஆகியவை இம்மூலிகையின் இலைப்பகுதிகளில் உள்ளதென ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் லைக்கோபீன்கள் தனித்த அமினோ அமிலங்கள் ஆகியவை இம்மூலிகையில் உள்ளதென அளவீடு செய்யப்பட்டுள்ளது.

  மருத்துவப் பயன்கள்

  வெள்ளறுகு மூலிகையின் குடிநீர் இரைப்பை மற்றும் குடல்வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாக வழங்கப்படும். சித்த மருத்துவத்தில் வௌ¢ளறுகு பாம்பு நஞ்சினால் ஏற்பட்ட உடலியல் மாற்றங்களுக்கு மருந்தாகப் பரிந்துரைக்க்ப்படுகிறது. மேலும் வாந்தி, பேதி ஆகியவற்றிற்கும் இலைச்சாறு உட்கொள்ளப்படுகிறது. சொறி மற்றும் மேகநோய் ஆகிய நிலைகளில் தோன்றும் தோல் நோய்களுக்கு வெளிமருந்தாகப் பயன்படுகிறது. பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாயின் போது வெள்ளறுகுச் சாற்றை மூன்று நாட்களும் அருந்த கருப்பைக் கோளாறுகள் நீங்கும். மிளகுடன் சேர்த்து குடிநீராக அருந்த வாதநோய்கள், நரம்புக் கோளாறு, மேகநோய்கள் தீரும்.

  அறிவியல் ஆய்வுகள்

  ஆய்வக விலங்குகளில் செயற்கையாக வேதிமங்களால் தூண்டப்பெற்ற கல்லீரல் புற்றுநோயை வெள்ளறுகு வடிசாறு குணமாக்கும் செயல்திறன் பெற்றிருந்ததுடன் அதிவளியேற்ற நிலையில் நொதிகளில் செயல்திறனைச் சீரடையச் செய்தமை கண்டறியப் பட்டுள்ளது.
  தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத் துறையில் மேற்கொண்ட மருத்துவ ஆய்வுகள் வெள்ளறுகு மூலிகை வடிச்சாறு, குறுகியகால வாத அழற்சி நோயில் தோன்றும் வீக்கத்தை ஹிஸ்டமைன், கைனின் மற்றும் புரோஸ்டோகிளான்டின் ஆகிய உயிர் வேதியங்களைக் குறைப்பதன் மூலம் நோய் நீக்கும் செயல் திறன் ஆற்றியதெனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வெள்ளறுகின் சாராய வடிசாறு (80%) ஆய்வக எலிகளில் உண்டான நீரிழிவைக் கட்டுப்படுத்தியது எனவும் ரத்த சர்க்கரை மற்றும் சர்க்கரை ஏற்றம்பெற்ற இரத்த நிறமியின் அளவைக் குறைத்து நாட்பட்ட நீரிழிவைக் கட்டுப் படுத்தியமையும் கண்டறியப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:15:05(இந்திய நேரம்)