தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கீழாநெல்லி

  • தங்க அலரி / மஞ்சள் அலரி (திருவாச்சி பூ )

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Thevetia peruviana (Pers.) Merr.

    குடும்பம் : Apocynaceae

    ஆங்கிலம் : Yellow Oleander, Exile Tree

    வளரிடம் : இந்தியா முழுவதும் வளர்க்கப்படும் தாவரமாகும். உயிர் வேலியாக நடப்படுகிறது.

    வளரியல்பு : புதர்ச் செடி, 3-6மீ உயரம் உடையவை, இலைகள் பளபளப்பானவை, இரு நுனிகளிலும் கூரானவை, மலர்கள் கொத்தாகக் காணப்படும். ஒளிரும் மஞ்சள் நிறம் கொண்டவை. சில சமயம் வெள்ளை அல்லது சிறிது செம்மை நிறமுடன் காணப்படலாம். கனி பக்க வாட்டில் அழுத்தப்பட்டிருக்கும். தடித்த கனியுறையுடையது. விதைகள் இரு நுனியிலும் குறுகியவை, கெட்டியானவை.

    மருத்துவப் பயன்கள் : இலைகள், பட்டைகள் வேர் மற்றும் கனிகள், விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகள் வாந்தி-பேதியினைத் தூண்டக்கூடியது. பட்டை மிக மிக கசப்பானது. இதன் கசாயம் காய்ச்சலைப் போக்கக்கூடியது. விதைகள் மிகக் கடுமையான நச்சு கொண்டவை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:33:21(இந்திய நேரம்)