தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வெட்டி வேர்

 • வெட்டி வேர்

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Vetiveria zizanodes Naxsh.

  குடும்பம் : Poaceae

  ஆங்கிலம் : Cuscus gass

  வளரிடம் : பல பருவ புல்செடி, அரிஅரியாகக் காணப்படும். கிழக்குக் கடற்கரை, மைசூர், வங்காளம் ஆகிய இடங்களில் பொதுவாகக் காணப்படுகிறது. நாக்பூர், தமிழ்நாடு ஆகிய இடங்களில் பயிரிடப்படுகிறது.

  வளரியல்பு : நட்சத்திர வடிவ மிக நுண்ணிய தூவிகளால் மூடப்பட்ட சிறிய புதர்ச் செடியாகும். இலைகள் அடி அகன்று நுனி குறுகியவை. மலர்கள் பல பாலின - இருவேறு தாவரங்களில் காணப்படுகின்றன. புல்லி வட்டக் குழலின் விளிம்பு பற்கள் முக்கோண அமைப்புக் கொண்டது. அல்லி இதழ் மஞ்சள் நிறம், பெண் மலர்களின் சூல் தண்டு நீளமானது. கனிகளில் புல்லி வட்டம் தோல் போன்றது. கனியினை நெருங்கி அமைந்தது. விதைகள் பல எண்ணிக்கையிலானவை.

  மருத்துவப் பயன்கள் : காய்கள் குடல் தொடர்பான நோய்களில் மருந்தாகிறது. வயிற்றுவலி, உப்புசம் மற்றும் சிறுநீர்க் கழிப்பில் ஏற்படும் வலியைப் போக்க வல்லது. கனிந்த நிலையில் உடல் நலம் தேறுவதற்கும் செயலியல் நிகழ்ச்சிகளைச் சரிசெய்ய உதவுகிறது. சிறுநீர்ப்போக்கு தூண்டுவி, வாந்தி தடுப்பன, துயில் தூண்டுவி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:33:52(இந்திய நேரம்)