தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கரிசலாங்கண்ணி

  • தேங்காய் பூண்டு / சித்தாமுட்டி

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Pavonia zeylanica (L) Car.

    குடும்பம் : Malvaceae

    வளரிடம் : சமவளிகள், கடற்கரையோரங்கள், பாழ்நிலங்கள், உழுத நிலம் மற்றும் தமிழகமெங்கும் தானே வளரும் சிறு செடி.

    வளரியல்பு : துணைக் குறுஞ்செடி 1 மீ. சிறுகிளைகள் ஒட்டும் இயல்புடையவை, நட்சத்திர மென் உரோமங்கள் கொண்டவை. இலைகள் ஆழமான 3- மடல்களானவை. மடல்கள் தலைகீழ் முட்டை வடிவானவை, மலர் 1. அல்லிகள் பளிச்சென்ற இளஞ்சிவப்பு / வெண்மை பெரிக்கார்ப் முனைகள் சிறகமைப்பானவை, விதைகள் மென் உரோமங்கள் உடையவை.

    மருத்துவப் பயன்கள: செடி முழுமையும் மருத்துவப் பயனுள்ளவை. தாதுக்களின் எரிச்சலைச் தனித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகப் பயன்படும். பாரிச வாதம், முகவாதம் போன்ற கடும் வாத நோய்களைத் தீர்ப்பதற்குரிய மருந்தாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:38:31(இந்திய நேரம்)