தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆமணக்கு

  • ஆமணக்கு

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Ricinus communis L.

    குடும்பம் : Eupherbiaceae

    ஆங்கிலம் : Castor oil plant

    வளரிடம் : இந்தியாவில் எல்லா இடங்களிலும் காணப்படும். பெரும்பாலான இடங்கள் தரிசு நிலங்களிலும் காணப்படுகிறது.

    வளரியல்பு : பசுமை மாறாத புதர்ச் செடி அல்லது சிறுமரம் 10 மீ உயரம் வரை வளரக்கூடியது. பல பருவத் தாவரம் இத்தாவரத்தின் மீது வெண்மை வண்ணத்தினை தூவி மாவு போன்று படிந்திருக்கும். இலைகள் நீண்ட காம்புடையவை. காம்பின் அடியில் சுரப்பி கொண்டது. கைவடிவ மடல், மடல் பிளவுற்றது. விளிம்பு பற்கள் கொண்டது. மலர்கள் நீண்ட ஆண் மலரில் மகரந்த தாள்கள் பலகற்றையாகக் காணப்படுகின்றன. பெண் மலரில் சூற்பை 3 அறை கொண்டது. மூன்றாகக் கிளைத்தது. கனிகள் வெடிகனி; கோளவடிவிலானது. விதையுறை கருப்பு வண்ணத்தில் அடர் சாம்பல் நிறக் கோடுகள், புள்ளிகள் (mottled) கொண்டது. கெட்டியானது, பளபளப்பானது ஆண்டு முழுவதும் மலர்கள் தோன்றும்.

    மருத்துவப் பயன்கள் : வதக்கிய இலைகள் தோல் கட்டி மற்றும் புண்மீது பற்றாகக் கட்டப்படுகிறது. வலிப்போக்கி, பால் சுரப்பி தூண்டுவி. வேர்ப்பட்டை வாந்தி தூண்டுவி, பேதிமருந்து, தோல்வியாதிகளுக்குப் பயன்படும். விதைகள் மிக்க நச்சுத் தன்மை கொண்டவை. 2 விதைகளே மரணம் விளைவிக்கக்கூடும். ஆனால் இதிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படும்பொழுது (வேகவைத்தபின்) நச்சு கலப்பதில்லை.

    குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க மார்பகங்களின்மீது எண்ணெய் தேய்த்து விடப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:27:01(இந்திய நேரம்)