தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கரிசலாங்கண்ணி

 • பூலைப் பூ / சிறு பூளை / கன்னிப்பூ / பொங்கல் பூ

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Aerva lanata L.

  குடும்பம் : Amarantheceae

  வளரிடம்: சமவெளிப் பகுதிகள், கடற்கரையோரங்கள் மற்றும் தமிழகமெங்கும் தரிசுகளில் தானே வளர்கின்றது.

  வளரியல்பு : நேரான நிலம் படிந்த சிறுசெடி 80 செ.மீ, இலைகள் நெருக்கமாக மாற்று அடுக்கமானவை, முட்டை உருண்டை வடிவானவை. கதிர் போன்ற தொகுப்புகள் இலைக்கோணங்களில் உள்ளவை. பூவடி மற்றும் பூக்காம்புச் செதில் சவ்வு போன்றவை. மலர்கள் இருபாலானவை, இலைக்கோணங்களில் வெண்மையான மலர்க்கதிர்கள் உடையவை. சூல்முடி 2 கிளைந்தவை.

  மருத்துவப் பயன்கள் : செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. சிறுநீர் பெருக்கும். இச்சாறு அல்லது கசாயம் காலை, மாலை குடித்துவர சூதக வலி, சிறுநீர்த்தடை, நீர் எரிச்சல், சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும், நீர்க்கட்டை உடைக்கும். ‘தை’ பொங்கல் அன்று பொங்கல் வைத்து பொங்கல் பானைக்குக் கட்டி சடங்கு செய்வார்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:38:01(இந்திய நேரம்)