தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சுண்டைக்காய்

  • சுண்டைக்காய்

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Solanum torvum Sw.

    குடும்பம் : Solanaceae

    வளரிடம் : தமிழ் நாட்டில் எல்லாப்பகுதிகளிலும் காணப்படுகிறது. வேலிகள், சாலையோரங்களிலும் காணப்படுகிறது.

    வளரியல்பு : முட்கள் கொண்ட பல முறை கிளைந்த தண்டுடைய புதர்செடி. 3-5மீ உயரம் வளரக்கூடியது. இலைகள் முட்டை வடிவானவை. மலர்கள் அதிக எண்ணிக்கையிலான கொத்துகளாக இருமுறை கிளைத்த அமைப்புடன் காணப்படும். வெண்மை மற்றும் ஊதா நிறமுடையவை, கனிகள் கோள வடிவிலானவை; சதைப்பற்றுக் கொண்டவை, விதைகள் அதிக எண்ணிக்கையிலுள்ளவை.

    மருத்துவப் பயன்கள் : அனைத்துப் பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. இலைகள் இரத்தக் கசிவினைத் தடுக்க வல்லவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டவை. சிறுநீர்ப் போக்கு தூண்டுவி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:33:00(இந்திய நேரம்)