தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கரிசலாங்கண்ணி

 • நிலவேம்பு

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Andrographis paniculata (Burm.f) Wallich ex Nees.

  குடும்பம் :Acanthaceae

  வளரிடம் :இலங்கை தீப கற்பம் மற்றும் சமவெளிப் பகுதி சாலையோரங்கள், தரிசு நிலங்களில் காணப்படும். சிறியா நங்கை என்ற பெயர் நம் மக்களால் இத்தாவரத்திற்கு வழங்கப்படுகிறது.

  வளரியல்பு : துணைக் குறுஞ்செடி – இலைகள் நீண்டு மெலிந்தவை – தலைகீழ் முட்டை வடிவானவை. பேனிக்கில் கிளைகள் கோணல்மானலானவை. புல்லி மடல்கள் சிற்சில சுரப்பி உரோமங்கள் கொண்டவை. அல்லிகள் இளஞ்சிவப்பு தோய்ந்த வெண்மை. மகரந்ததாள்கள் மற்றும் மகரந்தப் பைகளாகவும் உடையவை. சூல்பை மென் உரோமங்கள் கொண்டவை. கேப்சூல் நீண்டு உருண்டது. அழுத்தப்பட்டது. கனி வெளித்தோல் ஒளிவூடுருவானது.

  மருத்துவப் பயன்கள் :காய்ச்சல் அகற்றுதல், பசியுண்டாக்குதல், தாது பலப்படுத்துதல், முறைநோய் தீர்த்தல், இதன் கசாயம் மற்றும் கண்டங்கத்திரி கசாயம் சேர்த்து காய்ச்சிக்குடிக்க மலேரியா குணமாகும். பாம்புக் கடி மற்றும் விசத்திற்கு நல்ல மருந்து.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:37:19(இந்திய நேரம்)