தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

  • ஆரோக்கியம் அளிக்கும் மெக்னீசியம் தாது

    முனைவர் வா. ஹஸீனாபேகம்
    பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
    சித்த மருத்துவத்துறை

    உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவு வகையில் ஊட்டச்சத்துக்களான மாச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமீன்கள் இவற்றுடன் நுண்தனிமங்களும் ஆக்கச் சிதை மாற்றச் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்து உடல் ஆரோக்கியத்தைக் காக்கின்றன.

    இதில் நீண்ட ஆரோக்கிய வாழ்வை அளிக்கக்கூடியதாகக் கருதப்படுவது மெக்னீசியம் தாது ஆகும். இது ஆக்கச் சக்தி அளிக்கக்கூடிய நொதிகளின் செயல் வினை புரியத் தூண்டுதல் செய்கின்றது. நரம்பு மண்டலச் செயல்பாடுகளைச் சீராக்குகின்றது. அதாவது அதிகமான உணர்ச்சி வசப்படும் நிலையில் ஏற்படும் மாறுதல்களைச் சமன் செய்கின்றது. மேலும், ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. மன உளைச்சல், வலிப்பு நோய் போன்ற நிலைகளில் அருமருந்தாக உள்ளது.

    சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை மிகுந்த நிலையில் ஏற்படும் கண் பார்வை பாதிப்பு, இருதய நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது. கால்சியச் சத்தாலான பல் மற்றும் எலும்புப் பகுதிகளை வலுப்படுத்தும் செயலை மெக்னீசியம் செய்கின்றது.

    பெண்களுக்கு மிருதுவான தோல் அமைப்பிற்குக் காரணம் மெக்னீசியம் சத்து அதிகமாகவும் கால்சியம் சத்து குறைவாகவும் இருப்பதே ஆகும். மேலும் இது பித்தப்பை கற்கள் வெளியேற்றம், சிறுநீரக்க் கற்கள் நீக்குதல் போன்ற செயல்களையும் செய்கின்றது.

    குடற்பகுதியில் உள்ள நுண்ணுயிரிகள், மெக்சீசியம் சத்து உறிஞ்சுவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன. ஆரோக்கிய ஆயுள் பெற்று வாழ்வதற்கான தாதுவான மெக்னீசியம் சத்து, பச்சைக் காய்கறிகள், இலைகள், முளைவிட்ட தானியங்கள் இவற்றில் அதிகமாக உள்ளது.

    பச்சை நிற இலைகளில் காணப்படும் பச்சையத்துடன் மெக்னீசியம் தாது பிணைத்துக் காணப்படுகின்றது. எனவே இலை, காய்கறிகள், கீரைகள் அதிகமாக உட்கொள்ளுவதால் போதுமான மெக்னீசியத் தாது கிடைக்கப் பெற்று ஆரோக்கிய வாழ்வு பெறலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:12:59(இந்திய நேரம்)