தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

புளிய மரம்

  • வாகை மரம்

    முனைவர் கு.க.கவிதா,
    உதவிப் பேராசிரியர்,
    சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

    வைகை எனப்படும் வாகை மரம் போரில் வெற்றி பெற்றவர்கள் சூடுவது வைகை மலர்க்கொத்தாகும். வாகைப்பூவை வெற்றிப் பூ என்பர். வாகைப் பூ கொற்றவைக்கு உரியதாகும். எனவே கடவுள் வாகை எனப்படும்.

    தாவரவியல் பெயர் : அல்பிசியா லெப்பெக் (ALBIZIA LEBBECK (L) Benth )
    குடும்பம் : மைமோசி (Mimosoideae)

    வளரியல்பு :

    வாகை மரம்

    இலையுதிர்க் காடுகளிலே பரவலாகக் காணப்படும். இந்தியா முழுவதும் பரவி வளர்ந்து இருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரமாக உள்ள இடங்களில் நன்றாக வளர்கிறது. 15-20 மீட்டர் உயரம் ஓங்கி வளரும். இலைகள் 2-4 செ.மீ நீளமும், 12 செ.மீ அகலமும் உடையது. திருவாழ்கொளிப்புத்தூர் எனும் கோவிலில் வாகை தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

    பயன்கள் :

    வாகைப்பூ

    சிறந்த காற்றுத் தடுப்பு மரமாகவும், சாலைகளில் நிழல் தரும் மரமாகவும் பயன்படுகிறது. கடற்கரை ஆற்றங்கரை ஓரங்களில் மண் அரிப்பைத் தடுக்க வளர்க்கலாம். இலையை அரைத்து கண்களில் வைத்துக் கட்டுவதன் மூலம் கண் நோய்கள் குணமாகும். வேர்ப்பட்டையைப் பொடி செய்து, அதில் பல் துலக்கினால் பல் ஈறுகளில் வரும் புண்கள் குணப்படும். இதன் எண்ணெய் தொழு நோயைக் குணப்படுத்துகிறது. விதையைப் பொடியாக்கி மூக்குப் பொடியில் கலந்து, மூக்கிலிருந்து நீர்வடிதல், ஜலதோஷம் போன்றவற்றிற்கு முகரச் செய்வார்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:56:30(இந்திய நேரம்)