தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அகத்தி

 • அகத்தி

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Sesbania grandiflora Pers.

  குடும்பம் : Fabaceae

  ஆங்கிலம் : Swamp pea

  வளரிடம் : இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

  வளரியல்பு : குறுகிய காலம் வாழும், வேகமாக வளரும், மெல்லிய கட்டையுடைய மரம், உயரம் 6-9மீ வரை. சிறகு கூட்டிலை, குட்டையான கோண ரெசீம்கள் 2-4 மலர்கள், வெள்ளை, (அ) இளஞ்சிவப்பு அல்லிகளுடையவை. கனிகள் தட்டையானவை, 4-மூலைகள் கொண்டு உப்பிய விளிம்புகள் உடையவை, 15-30 வெளிறிய நிறமுடைய விதைகள்.

  மருத்துவப் பயன்கள் : இலைகள், மலர்கள், பட்டை, வேர் ஆகியன. கல்லீரல் நோய்களுக்கு இலையை மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் இலையை வேக வைத்து தண்ணீர் கசாயம் செய்து குடிக்க குடல் மற்றும் வாய்புண் கோளாறுகள் சரிசெய்யப் பயன்படுத்துகின்றன. வேர்ப் பகுதியைத் தொழு நோய்களுக்கு அரைத்துப் பூசப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:26:19(இந்திய நேரம்)